ரயில் விளையாட்டு.. கோடுகள்.. மவுன விளையாட்டு!
01.!
ரயில் விளையாட்டு!
----------------------------!
வரிசையாக ஐந்து வாண்டுகள்!
ஒன்றின் இடுப்பை!
ஒன்று பிடித்து விளையாட!
காடு மலை பள்ளமென்று!
சளைக்காமல் சென்றது ரயில்.!
நடுவில் திடீரென!
மண்டிப்போட்டு தவழும்!
குழந்தையொன்று வர!
திடீரென பதறிப்போய்!
நின்றது ரயில்.!
நானும் ச்சும்மாங்காட்டி!
ரயில் கடக்கும் வரை!
காத்திருந்து நடந்தேன்.!
02.!
கோடுகள்!
--------------!
கையெழுத்து நேராக!
வரவேண்டுமென்பதற்காக!
கோடுப்போட்ட நோட்டு!
ஒன்றை வாங்கி தந்தேன்!
ஐந்து வயது மகளுக்கு.!
எப்படி முயற்சித்தும்!
எவ்வளவு திட்டினாலும்!
கோட்டுக்குள் அடங்க மறுத்து!
வெளியே வெளியே!
வந்து விழுந்தன எழுத்துக்கள்.!
கோபத்தில் இரண்டு அடியும்!
வைத்தேன். சற்றுக் கழித்து!
கோடுபோடாத நோட்டொன்றில்!
கிறுக்கியவள் எழுத்துக்களுக்கு!
ஏற்றாற்போல அழகாக கோடுகள்!
வரைந்து என்னிடம் நீட்டினாள்.!
03.!
மவுன விளையாட்டு!
-------------------------!
வீட்டு விசேசமொன்றிற்கு!
வந்த குழந்தைகள்!
இங்கும் அங்குமாய்!
ஆடி ஓடி கூச்சலிட்டு!
துரத்திக்கொண்டு!
ஆர்ப்பாட்டமாய் விளையாடினார்கள்.!
யாரோ அதட்டினார்கள்.!
சொன்னா கேக்க மாட்டீங்க?!
மவுனமாக விளையாடுங்க.!
பிறகு குழந்தைகள்!
மவுனத்தை கத்தியபடியே!
அறையெங்கும் ஆடி ஓடி!
அலைந்து சொன்னார்கள்

என். விநாயக முருகன்