குழுக்களா.. கூட்டமு..நல்லறி..வெருவினார் - எசேக்கியல் காளியப்பன்

Photo by Jan Huber on Unsplash

குழுக்களாய் முன்னே செல்வோம்!.. கூட்டமும் மறையும்..கூறுகள் கலையும்..!..வெருவினார்க்கு அஹிம்சை வீரமாய்த் தோன்றிடாது!!
01.!
குழுக்களாய் முன்னே செல்வோம்!!
---------------------------------------------!
நேரு வேலை வாய்ப்புத் திட்டம்!
கூறி அழைத்துக் கொடுத்த வேலையைச்!
சீருடன் செய்து சிறப்புடன் முடித்து!
நேரிய வழியில் நிதம்பெறும் கூலி!
சேரிடம் மதுக்கடை இலதாய், உள்ளம்!
தேரிய மக்கள் திருந்திய பேராய்!
வாரி முடித்து,அவர் வாரிசுக ளுடனே!
பூரித் திருக்கும் பூவையர் கைகளில்!
சேர்த்து மகிழும் சிறப்பினைப்!
பார்த்தெம் மனமும் பரவசம் உறுமே!!
நாட்டிலே ஆட்சி செய்வோர்!
-நலம்பல பெருகும் வண்ணம்!
கூட்டிடும் திட்டம் எல்லாம்!
-குறித்தவா றெடுத்துச் செல்ல!
நாட்டமும் மக்கள் கொள்ள!
-நன்மைகள் விலகிப் போமோ?!
கோட்டமும் மனத்து நீக்கிக்!
குழுக்களாய் முன்னே செல்வோம்?!
02.!
கூட்டமும் மறையும்..கூறுகள் கலையும்..!!
-------------------------------------------------!
விதியென் றென்னை!
வீதியில் விட்டவன்!
கதியினை எனது !
கைகளில் எடுத்தேன்!!
களிமண் பிசைந்தேன்;!
கடவுளாய் மாற்றினேன்!!
ஒளிர்வண்ணக் கலவையை!
ஊற்றியே மினுக்கினேன்!!
விழியெலாம் திறந்து!
வியப்புடன் பார்த்தனர்!!
வழியெலாம் வைத்து!
வழிபா டெடுத்தனர்!!
படைத்தவன் என்னைப்!
பாடிட மறந்து!
படைப்பினைப் போற்றிப்!
பாடியே மகிழ்ந்தனர்!!
அலைகடல் அடைந்தே!
ஆட்டமும் நிற்கும்;!
சிலைகளாய்க் கடவுளர்!
சிறுத்துள் மறைவர்!!
கூட்டமும் மறையும்;!
கூறுகள் கலையும்!!
பாட்டினை அலைகள்!
பாடியே திரும்பும்!!
03.!
நல்லறிவின் உழவர்களைப் போற்று வோமே!!
-----------------------------------------------------!
ஏட்டினிலே இருப்பதையே எடுத்துச் சொல்லி!
எக்கேடும் கெட்டுப்போ என்றி ராமல்!
கூட்டினிலே மகிழ்ந்திடவும் குறிக்கோள் தன்னைக்!
கூடிவரும் மாணவர்க்குக் காட்டி நின்றும்,!
ஆட்டபாட்டம் இருந்தாலும் அறிவுத் தாகம்!
அமைந்தவொரு பருவத்தின் அழகை யூட்டித்!
தோட்டமிந்த உலகிதிலே மலர்கள் நீங்கள்!
தொடர்ந்துமணம் வீசுமென அனுப்பி வைக்கும்!
நாட்டமெலாம் நன்மைக்காய் நாடு யர்த்தும்,!
நல்லறிவின் உழவர்களைப் போற்று வோமே!!
வாட்டமிலா இளைஞரினம் வளர நாடும்!
வளருமென அவர்பணியை வாழ்த்து வோமே!!
04.!
வெருவினார்க்கு அஹிம்சை வீரமாய்த் தோன்றிடாது!!
---------------------------------------------------------!
புரணிகள் தவிர்க்க வாரீர்!!
பூசலை ஒழிக்க வாரீர்!!
கரணிகள் கண்ட றிந்து !
[கரணி= மருந்து]!
காழ்ப்புகள் போக்க வாரீர்!!
பரணியும் பாட வாரீர்!;!
பாரிதில் மகிழ வாரீர்!!
தரணியை வெல்ல வாரீர்!!
தமிழையும் உயர்த்த வாரீர்!!
சிரசினில் கோபம் ஏறச்!
சிந்தனை கெட்டுப் போகும்!
உரசிடும் பொருட்கள் சூட்டை!
உதறிடப் போமோ? காந்தி!
பெருமையை மறந்து விட்டோ!
பிரிவினைக் குதவி நிற்போம்!!
விரலென அழுக விட்டால்!
விக்கினம் உடலுக் கன்றோ?!
ஒருவிரல் என்று நாட்டை!
உயர்த்தியே காட்டி அன்றே!
உருவிய வாளைக் கூட!
உறையினுள் அனுப்பக் கண்டோம்!!
வெருவினார்க்(கு) அஹிம்சை வாழ்க்கை!
வீரமாய்த் தோன்றி டாது!!
பொருதலால் அழிவே மிஞ்சும்!
புரிய ஏன் மறுக்கின் றீரோ?
எசேக்கியல் காளியப்பன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.