ஊரிருந்து - செந்தமிழ்

Photo by Tengyart on Unsplash

இடம்விட்டுப் போனாலும் - எம்!
மனம்விட்டுப் போகாத உறவுகளே!!
ஊரிருந்து எழுதுகின்றேன. - நீங்கள்!
புலம்பெயர்ந்தவர்கள் அல்ல. - ஈழம்!
புலர்விற்காக திரியினுக்கு நெய்!
தேடிச்சென்றவர்கள்!
மலர்கின்ற ஈழப் பூவினுக்கு நறுமணம்!
தேடிச்சென்றவர்கள்.!
உறவுகளே!...!
வருகின்றது மரணித்தும் மரணிக்காத!
தமிழ்வீரர் திருநாள்..!
கார்த்திகை 27!
அருகிருந்து அவர்கள் கல்லறைக்குப்!
பூச்சொரிய வேண்டும்!
வாருங்கள் - இது!
“கந்தசாமிப் புலவனின் கங்கையில் விடுத்த ஓலை“ அல்ல!
சொந்த மண்ணிருந்து பந்தங்களிற்கு வரையும் “பாசமடல்“!
பகை கலம் வந்து குண்டுகள் பொழிந்து - எரி!
மலைகள் என எம் தேசம் எரிகையில்..!
பனிபடர் தேசத்தில் பாயினை விரித்தும்..!
தனிமையில் நின்று மாண்டிடாது எம்மை - கடும்!
குளிர் காலத்தில் காசினைத் திரட்டி!
நாய் படாப் பாடாய் உழைத்துமே காத்தீர்...!
பெருமையால் எங்கள் நெஞ்சமே கனக்குது!
கார்த்திகை மாதத்து காற்று வந்து சொல்லுது!
மார்கழி வருமுன் கூடுவிட்டுப் போன!
குஞ்சுகளை!
நாட்டுக்கு வந்து “ நாயகர் திருநாளை “!
தரிசிக்கலாம் என்று...!
கூடுவிட்டுப் போன உறவுகளே! - நாளை!
கூடுங்கள் உங்கள் முற்றத்தில்!
கூடி நின்று நாங்கள் - களம்!
ஆடிப் பகையோடு சமராடி - ஈழக்!
கனவோடு விழிமூடிப் போனர் நினைவோடு கலப்போம்.!
சிவனினைத் தேடிச் ”சிதம்பரம்” போகலாம்!
கர்த்தரைத் தேடி ”ரோம்” நகர் செல்லலாம்!
அல்லாவைத் தேடி ”மக்காபுரி” செல்லலாம் - எனினும்!
அன்னியர்க்கு அடிபணியா வீரம் வேண்டின்..!
கண்ணிமைக்கும் பொழுதினிலே காவியமான!
காவலர்கள் வரம் வேண்டின் - இதை!
எண்ணியாரும் அலைய வேண்டாம்!
புண்ணிய பூமியாம் உங்கள் முற்றத்தில் தான் உண்டு!
வாருங்கள் எங்கள் இனம் வாழ!
தங்கள் சுகங்களையே ஈர்ந்தவர்கள்!
உங்கள் வரவிற்காய் காத்திருக்கிறார்கள்!
வாருங்கள்!
காலம் கடந்து கூழாகிப் போகும்!
சமாதான முட்டையிலிருந்து பொரிக்காது!
எம் ”சுதந்திரச் சிட்டு”!
ஈழத்தாய் சுமக்கும் பல்லாயிரம் மறத் தமிழ்!
வித்துக்களில் இருந்தே வெடிக்கும்!
எம் ”சுதந்திர விருட்சம்”!
இடம் விட்டுப் போனாலும் - எம்!
மனம் விட்டுப் போகாத உறவுகளே!!
வாருங்கள் கார்த்திகைத் திருநாளில்!
ஊர் கூடி நின்று அர்ச்சிப்போம் - எம்!
விடுதலைக் கருவூலங்களை!
எப்பனும் பிசகாத எம் ஈழம் பெறவும்!
அப்பனும் ஆத்தையும் ஆண்ட பூமியதை!
புல்லர்கள் காலிருந்து மீட்கவும்!
சபதங்கள் செய்வோம் வாருங்கள்!
சத்தியம் சொல்கிறோம்!
நிச்சயம் தமிழீழம் பிறக்கும்!
” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் ”!
- செந்தமிழ் -!
கிளிநொச்சியிலிருந்து ஒரு போராளியின் குரல்
செந்தமிழ்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.