அகநானூறு... காதல் திருட்டு - செ.ஹேமலதா

Photo by engin akyurt on Unsplash

அகநானூறு !
காதல் உணர்வில் !
உயிரது பாதியாய் !
பறிபோகின்ற வேதனையை !
சிந்தாமல் சிதறாமல் !
அள்ளியெடுத்து அழகாய் !
கோர்த்த பாமாலையே !
அகநானூறு !
சிலைவடிக்கும் சிற்பியின் !
கவனமும் சிலநொடிகள் !
சிறகடித்துப் பறக்கமுடியும் !
கதவோரம் சாய்ந்து !
கால்கடுக்க காத்து !
கண்ணிமைகள் இமைத்தால் !
கண்ணாளன் வருகின்ற !
வழிதனை மறைத்திடுமென !
கண்ணிமைக்காமல் கிடக்கும் !
பெண்ணவள் உணர்ச்சியே !
அகநானூறு !
காதோரம் சுருண்டிருக்கும் கூந்தல் !
கன்னத்தை வருடுகையில் !
காதலன் தீண்டலென அலைபாயும் !
அவளது கண்களின் ஏக்கமே !
அகநானூறு !
ஆனால், !
சின்னதொரு குழப்பம் !
ஈருடலும் ஓருயிருமே !
காதல். !
பிரிவென்பது நினைப்பவர்க்கு !
பிரியாத மனமிருக்க !
உணர்வென்பது உடனிருக்க !
பிரிவென்ற பொய்யெதற்கு !
காதலில், !
காதலென்னும் ஊடலில் !
பிரிவு பொய்யானால் !
பிரிவென்னும் பொய்யினை !
மீண்டும் மீண்டும் கூறுவதே !
அகநானூறு !
காதல் ஊற்றினைக் !
காமக் கடலினைக் !
கண்முன் விரித்து !
கண்களைக் கட்டிக்கொண்டு !
விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டே !
அகநானூறு !
2.காதல் திருட்டு !
களவுபோன !
கன்னியின் இதயம் !
களவாடிச் சென்ற !
கள்வனுக்கு எழுதுவது. !
இப்பொழுதெல்லாம் என் இதயம் துடிப்பதில்லையடா !
என் இதயம் திருடப்பட்ட இடத்தில் !
குடிவந்திருக்கும் உன் நினைவுகளே !
என்னில் விடாமல் துடிக்கின்றன !
காதல் திருட்டின்போது நீ விட்டுச்சென்ற அடையாளமாய் !
என் கன்னத்தில் !
உன் உதடுகளின் ரேகைகள் !
தண்ணீர் கேட்ட அம்மாவிடம் !
தலையணை எடுத்துக் கொடுக்கும் !
கிறுக்கியாய் என்னை மாற்றிவிட்டாயடா* !
என் கண்களுக்குள்ளும் !
காதல்நோய் பற்றிக் கொண்டதடா* !
என்ன புரியவில்லையா? !
சட்டென வந்த காற்று !
சம்மதம் கேட்காமல் !
என் உடையினை சரிக்க !
என் கண்கள் காற்றிடம் மொழிகின்றன !
இதற்கு உரிமையானவன் நீயல்லவென்று* !
என்னை வாட்டியெடுக்கும் !
காதல்நோயில் தீவிரத்தால் !
உன் இதயமென்னும் சிறையில் !
நான் கைதியாகிவிட்டேனடா* !
திருடியது நீ !
சிறைப்பட்டதோ நான்* !
என் உயிருக்குள் !
அணையாத நினைவென்னும் தீவைக்கும் !
காதல்நோயின் தீவிரம் தணிக்க !
உன் மணமென்னும் மணவறையில் !
என்னை மனைவியாக்க வாடா. !
இப்படிக்கு உன் திருட்டுக்கு !
உன்னுள்ளேயே காதல் கைதியான !
காதலி இதயம். !
தமிழச்சி செ.ஹேமலதா, !
இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி, !
விவேகானந்தா மகளிர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், !
திருச்செங்கோடு
செ.ஹேமலதா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.