சுவரில் இருக்கும் பல்லியைப் பார்க்கிறேன்!
ஒரு பல்லியைப்போல் இல்லையது!
நான் சிரிக்கிறேன் அதுவும் சிரிக்கிறது!
வெறுப்பாகப் பார்க்கிறேன் -அதுவும்!
முத்தமிடச்செல்கிறேன்-இருந்தும்!
ஒரு பல்லியைப்போல் இல்லையது!
ஒரு பல்லியென அதுவிருந்தால்!
எனது முத்தத்திற்காக காத்திருக்கும்!
அல்லது!
துடிதுடிக்கும் வாலைச்சுழற்றியபடி!
என்னைப் பார்த்துப் படபடக்கும்!
அது சுவரில் இருப்பதால் ஒருவகையில்!
பல்லியாகவும் இருக்கலாம் -அல்லது!
நேற்றையதின் நிழலாகவும்!
பல்லியென உறுதி செய்யவதன் சத்தம் !
தேவை!
பல்லி சொல்வது சகுனமென அம்மா சொல்வாள்!
பல்லி வாலைக் குறுகுறுத்துச் சுழற்றும்!
குறியெழுப்பும்:பல்லியின் குறியில் !
உனது விதியிருப்பதையுணர்!
சகுனமென நான் பல்லியின் குறியைப் பார்க்கிறேன்!
பல்லின் குறியைப்போல் இல்லையது

ஆதி பார்த்தீபன்