தேவதை - ஆஷிகா கொழும்பு

Photo by Jayden Collier on Unsplash

மார்கழி பனியில்!
மண்டப படியில்!
மணிபுறாக்களோடு!
மேற்கு நோக்கி !
காத்திருக்கிறாள் !
இவள்...!
கிராமத்து தேவதை...!
சில்லிடும் பனி !
சிலிர்கவில்லை!
உன் நினைவின் !
சிலிர்ப்பு இவளுக்கு....!
கிட்டது !
குயிலோசை !
தூரத்து ரயிலோசை!
இவள் செவிகளுக்கு!
மட்டும்....!
மண்சாலையில்!
செல்லும் !
மாட்டு வண்டியின் !
ஓட்டம்!
நீ போட்ட !
தாளம் இந்த!
மங்கைக்கு....!
சிற்றோடையில் !
துள்ளிடும் மீன்கள்!
அல்ல - அவை!
சிற்றிடையாள்!
சிந்திடும் உன்!
சிந்தனைகள்....!
பின்னி முடிந்த!
கூந்தல் நுனியை!
முறுக்கியிழுத்து!
சிரிக்கிறாள்!
சிங்காரி...!
மீசைக்காரன் !
ஞாபகத்தில்...!
அணில் கடித்த !
கொய்யாப்பழம்!
தானுண்டு!
பஞ்சவர்ண தாவணி!
தென்றலில் படபடக்க!
மனம் பகிர்ந்தவன்!
வருகையை எண்ணி !
தவிக்கிறாள்!
பைங்கிளி....!
நெற்றிப் பொட்டு !
கரைய ....!
பொழுது கரையாதோ!
என் சலிக்கிறாள் !
சந்தன மேனி !
சிலையாள்....!
வெள்ளைமனம் !
கொண்டவள் !
வைத்த கண்!
வாங்காது!
தரிசனத்துக்காய் !
ஏங்குகிறாள் !
குழந்தையாக....!
அந்தி மல்லி !
அவிழும் முன்!
அன்பு சொல்ல !
வருவானென!
தவமிருக்கிறாள் !
கிராமத்து தேவதை..!
இல்லை இல்லை!
இவள் உன்னுடைய தேவதை
ஆஷிகா கொழும்பு

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.