தொண்டு செய்தால் - இராஜ. தியாகராஜன்

Photo by Jan Huber on Unsplash

அன்பே மலிய அனைவர்க்குந் தொண்டுசெயின் !
இன்பம் மலியுமென்ற பாவேந்தர் சொற்களையென் !
சிந்தனை மத்தால் சிலுப்பிய போதினில் !
வந்துதித்த எண்ணமதை வாகாய் இயம்புகிறேன். (வந்து) !
வாடிய நெற்பயிரை கண்டதுமே வாடியவர் !
தேடிய தென்றும் உயிர்தழைக்குந் தொண்டதுவே! !
நாடது போற்றும் விவேகா நந்தரும் !
நாடிய துண்டோ புகழை பொருளை? (நாடிய) !
இறைமை யெனுங்கரு தாண்டி மனிதம் !
பரப்பிய வாரியார் தீர்த்தர் ரமணர்; !
மறைமலை போன்றே செழுந்தமிழ் மேன்மை !
உரைத்தத் தமிழர் நிலையின்று தாழ்வோ? (உரைத்த) !
மதத்தின் தலைமை பொறுப்பென்றும் பீடத்தில் !
பதமா யமர்ந்தே புகழ்தேட லில்லை; !
மதத்தின் வழியினில் மக்களின் தொண்டாம்! !
அதைமறக்க வீழ்வா ரழிந்து! (அதை) !
---------------- !
வாடிய நெற்பயிர் கண்டு வாடியவர் = இராமலிங்க வள்ளல் !
வாரியார் = கிருபாநந்த வாரியார் !
தீர்த்தர் = இராம தீர்த்தர் !
ரமணர் = இரமண மகரிஷி !
மறைமலை = மறைமலையடிகள் !
அன்பு மலிய உயிர்களுக்கு தொண்டு செய்தால் இன்பம் மலியும் என்ற வரிகள் !
பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள் !
-------------------------- !
அன்புடன் இராஜ. தியாகராஜன்
இராஜ. தியாகராஜன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.