அடி சிருக்கி,!
மருதாணி போடும் போது!
மச்சான நினைச்சியோ!
இப்படி செவந்துருக்கே....!
காலையில,!
வாசல் கூட்டயிலே!
சந்திரன பாத்து!
என்னதான் சொன்னியோ.!
அது வெட்கத்துல மறஞ்சுடிச்சே...!
தல குளிச்ச ஈரத்தோட!
தாழ்வாரத்துல நீ சேல காயப்போட்டத!
பாத்த பட்டம்பூச்சி ஊரெல்லாம் சொல்லுச்சி!
பூ ஒன்னு பூத்துடுச்சி....!
காத்துல ஆடுன உன் சேல முந்தானைய!
இடுப்புல அள்ளி சொருகுனியே,!
அத பாத்த சமையலற சாமானுக்கெல்லாம்!
சஞ்சலம் வருதேடி... !
காலையில எழுந்துருச்சு!
கால மெல்ல தொட்டு கும்பிட்டு!
காத லேசா கடிச்சு, கொடுத்த!
காப்பியில நீ போட்ட உப்பு கூட இனிக்கிதடி...!
ஈரம் காஞ்ச பின்னாடி,!
கண்ணாடி முன்னாடி நீ நின்னு!
தலையில இருந்த ஈரத்துண்ட கலட்டயில!
கதறி அது அழுவுதடி....!
கண்ணாடிகோ காய்ச்சல் கொதிக்குதடி...!
சமையலுக்கு வேணும்ன்னு நீ கத்தி வச்சு வெட்டியா காய்கறி எல்லாம் சிரிச்சுகிட்டே சாகுதடி.....!
வேர்த்தப்ப நீ சிந்திய வேர்வ எல்லாம் !
வெல்லம் போல் இருக்குதுன்னு!
வெண்டிக்கா பேசுதடி...!
காதல் வந்துருச்சு-னு கத்தரிகாயும் கதைக்குதடி...!
உன்ன தொட்டு போகத்தான் !
தென்றல் என் வீடு பக்கம் வீசுது-னு!
நான் சொன்ன யார் நம்புவா??!
நட்டநடு ராத்திரியில!
சன்னல் வழியா சந்திரன்!
எட்டிப் பாக்குறானு யாரறிவார்???!
சந்தையில நான் வாங்குன மல்லிப்பூ!
வாசம் போல கள்ளி நீ!
போகயில வீசுற வாசத்தோட ரகசியத்த சொல்லுவியோ??!
இல்ல காதலோட!
கன்னம் உரச வந்த என்ன,!
வெட்கத்தோட மெத்தையில தள்ளுவியோ??

சரவண குமார்