அவள்!
சழுக்கு கயிற்றை அறுத்து எறிந்து!
சாத்திர நெருப்பை மூச்சுக் காற்றால்!
ஊத்தி அணைக்க முற்பட்டாள்!
சமூக சத்திரத்தில் சமயல்காரியாக!
சில காலம் முன்னே வலம் வந்தவள்!
சமூக சரித்திரத்தில் பெயர் எழுத முற்பட்டாள் .!
கால் சென்டர்களில் கத்திய குரல்களால்!
கிடைத்தது வாயாடி பட்டம்!
ஹாக்கி இச்டிக் பிடித்த கைகளை!
பேசாமல் லிப்ஸ்டிக் பற்றிய பேச்சுக்கள்!
நிமிர்ந்த நன்னடையால் நேர்கொண்ட பார்வையால்!
ஆனார்கள் திமிர் பிடித்தவர்கள் .!
அங்கு!
விண்வெளியின் விளிம்பில் கொடி நாட்டியதும்!
வெண்கலத்தை வாங்கி நடை போட்டதும்!
தன கரத்தால் தாய்நாட்டை தாங்கியதும்!
கால் பக்க செய்திகளாக தாள் வழியே போனது ..!
இங்கு!
கள்ளக் காதல் செய்த கள்ளிகளை!
மாமியார்கள் என்னும் வில்லிகளை!
களியாட்டத்தில் மயங்கிய மங்கைகளை!
கற்புக் கடையில் வியாபாரமான நங்கைகளை!
விரசமாக எழுதுகிறது விஸ்வமிதிரர்களின் எழுதுகோல் .!
இது!
முள்மேடையில் அக்னி சதங்கைகள் கட்டி!
கண்ணாடி கற்கள் சூழ்ந்த அறையில்!
விமர்சன தேன்கலசம் ஏந்திய!
துச்சாதனர்கள் மத்தியிலே!
நடத்தும் ஓரங்க நாடகம்!
விஷத்திரைகள் விரிகிறது!
அவள் அரங்கேற்றம் நிகழ்த்த துடிக்கிறாள்!
நீள் வானத்தை எட்ட நினைக்கிறாள்!
நிர்வானத்தை ரசிக்க துடிக்கும் இவர்கள் மத்தியில் ...!
சாதனை சிலந்திக் கூட்டை!
பின்னி முடிக்கையில்!
சில நேரம் மௌன ஆடைகள்!
விலகி விடுங்கின்றன!
கூனாகி கூடாகும் வரையில்!
ஊனாகவே பார்க்கப்படும் இவளின்!
ஓவ்வொரு சொட்டு கண்ணீரும்!
பூமியை அழிக்கும் பாதரசம்

வே .பத்மாவதி