புதைக்கப்பட்ட பிணங்கள்
உடற்கூறு ஆய்வுக்காக
மீண்டும் தோண்டி
எடுக்கப்பட்டு கிடக்கின்றன
குடலை பிடுங்கும்
நாற்றம் வீசுகிறது
உறவுகள் பொறுத்து நிற்கின்றன
எதிரிகளும் கூட அப்படியே
சிங்கம் வேட்டையாடி
உண்டு மிஞ்சி விட்டு சென்ற
காட்டெருமை உடலை
கழுதைபுலிகள் குதறி தின்கினறன
மருமகளால் உன் அம்மா
வருத்தமடைகிறாளென
உனக்கு ஏற்படும் ஆதங்கத்தில்
பங்கேற்றொரு நடிப்பு
அடிமனதில் கொடூர சந்தோஷம்
பூப்பதை கண்களினோரம்
மறைக்க திரும்புகையில்
இதழ்களில் வடியும் குருதியை
துடைக்காமல் நிற்கும்
எதிர்வினை செய்யாத
என் பலநாள் மெளனம்
வே பிச்சுமணி