இது யாருடைய உள்ளாடை? - தமிழச்சி

Photo by FLY:D on Unsplash

கேள் சிங்களவனே...!!
பிரபாகரன் ஒழிந்தான்...!
புலிகளின் தலைவன் மறைந்த...!
இன்றைய தினத்தை...!
தேசிய விழாவாக...!
கொண்டாடுங்கள் என்று...!
ஆவேசமாக அறிக்கை விடுகிறான்...!
இராச பட்சே...!!
அன்று முழுவதும்...!
கொண்டாட்டமும் கும்மாளமுமாக...!
உலகம் முழுவதும் செய்திகள்...!
புலிகளின் தலைவன் இறந்தான் என்று...!!
எங்கே பிணம்...!
இந்தியா உறுதி செய்ய கேட்கிறது...!
கோடி கோடியாய் கொட்டி...!
´கேடி´ வேளை பார்த்தவன்...!
நாட்டாமை செய்வது...!
நியாயம் தானே...?!
பிணம் பரிசோதனையில்...!
இருக்கிறது என்றான் நேற்று...!!
இன்னும் உறுதி செய்யப்படவில்லை...!
என்கிறான் இன்று..!!
புலிகளின் தலைவன் இன்னும்...!
மரணமாகவில்லை என்பான் நாளை...!!
கூட்டணியில் நடக்கும் இனவொழிப்பு...!
அந்த இனத்தின் தலைவனின்...!
ஒரு மயிரைக் கூட...!
புடுங்க முடியாத துப்புகெட்டத்தனம்...!
தலைவனின் துணைவி உள்ளாடையை...!
ஆராய்ச்சி செய்ய புறப்பட்டிருக்கிறது...!!
ஆம்! தீவிர ஆராய்ச்சி...!
நடக்கிறது சிங்களத் தீவினிலே...!
கையாளாகாதவனின்!
வீரதீர சாகசங்கள்!
தமிழச்சிகளின் உடல் ஆராய்ச்சிக்கு!
போய்விட்டது..!!
தமிழச்சிகளின் முலைகளை வெட்டியெடுத்து...!
அனுப்புங்கள் உங்கள் அதிபருக்கு...!!
உள்ளாடைகளை பார்சல் கட்டுங்கள்...!
தமிழனை உருவாக்கும்...!
கர்பப்பையை அறுத்து அனுப்புங்கள்...!!
ஒருவேளை அதிபரின் திறமை...!
இதிலாவது வெளிப்படட்டும்..!!
ஆராய்ச்சியை தொடருங்கள்...!
அதை அங்கீகரிக்க சர்வதேசமும் இருக்கிறது...!!
!
19/05/2009!
(தற்போது இணையத்தில் மின்னஞ்சல்கள் மூலமாக இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ்பெண்களின் உடல்களும், உள்ளாடைகளும் மற்றும் காண சகிக்காத வார்த்தைகளுடனும் படங்கள் வெளியிடப்படுகின்றன. புலிகளின் தலைவர் பிரபாகரனின் துணைவியாரை குறிவைத்து அனுப்பப்படும் ஆபாசப்படங்களுக்கு எதிர்வினையாக என்னுடை உணர்வுகளை பதிவு செய்ய விரும்புகிறேன். மானமுள்ள தமிழர்களுக்கு ரோஷம் வந்தால் * மின்னஞ்சல் முகவரிக்கு மெயில்கள் அனுப்பி ஆராய்ச்சிகள் பற்றி விசாரிக்கலாம்.)
தமிழச்சி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.