விடியும் விடியும்!
என்று காத்திருந்தோம்!
விழுகிறது!
இடிமேல் இடியாய்!
எங்கள்!
தலைகள்மேல் மட்டுமல்ல!
தலைமுறைகள் மீதும்!
குருதியில் மூழ்கும் உயிர்களில்!
மீழும் உயிர்கள் சிலவே!
கரிசனை கொண்ட!
சர்வதேசம் எமைக்!
காத்திடும் எனநம்பி!
காலங்கள்போகுதிங்கே!
காலனும் நெருங்கிறானெம்மை!!
தப்பிக்க வழியின்றி!
பதுங்குகுழி வாழ்க்கையில்!
பாதி ஆயுள் கழிகையில்!
அங்கே நீங்கள்!
உப்பில்லாப் பேச்சுக்களால்!
உம்மிருப்பை நிலை நிறுத்த!
ஊரூராய் போய்!
உபதேசம்செய்கிறீர்!
தினம் தினம் நீட்டப்பட்ட!
துப்பாக்கி முனைகளிலே!
தொங்கிக் கொண்டிருக்கிறது!
எமது எதிர்காலம்!
எப்போது தான்!
இந்தத் துப்பாக்கிகள்!
துருப்பிடிக்கப் போகின்றன.!
எப்போது தான் எமது கனவுகள்!
தூசுதட்டப் படப்போகின்றன!
எப்போது தான் எமது!
தலைகள் நிமிரப்போகின்றன
மிருசுவிலூர் எஸ்.கார்த்தி