ஆகாயமார்க்கமாக பயணப்பட்டவர்களை!
ஆகயத்தோடே தன்னோடு!
அழைத்துக்கொண்டுவிட்டான்!
அந்த காலன்...!
எருமை வாகனத்தவன்!
அழைத்தால் போகாதவரும்!
உண்டோ!!!...!
!
கும்மிருட்டில், கொட்டும் பனியில்!
வழிதவறி அடைக்களம் தேடும்!
பூனைக்குட்டிகளை!
அரவணைத்துப்பாலூட்டும்!
ஐந்தறிவு நாய்கள் கூட!
உயிர்கள் தோன்றிய!
காலம் தொட்டு!
இயற்கை வளர்த்துவிட்ட!
வேட்டை விதிகளை மறந்து,!
நட்பு பாராட்டும்போது,!
அறிவை வளர்க்கும் பொருட்டு!
கல்வி கற்கும் நோக்கில்!
உன் நாட்டிற்குப்பயணப்பட்ட!
என் தோழனை!
அடித்துத் துன்புறுத்தி!
ஐந்தறிவு விலங்கினம் நாயல்ல!
நான்தானென்று சொல்லாமல்!
சொல்லியிருக்கிறாய்...!
உனக்கொன்று சொல்கிறேன்...!
!
தெய்வப்பிறவியாவது உனக்கும்!
எனக்கும் பெரிய விஷயமே...!
ஆனால்,!
குறைந்தபட்சம் மனிதனாக இருக்க!
முயற்சி செய்வோம்...!
!
உன் நாட்டைச்சுற்றி!
நாற்புறமும் கடல்சூழ்ந்து!
என்ன பயன்,!
நெஞ்சில் எவருக்கும்!
ஈரம் இல்லையே...!
முப்புறம் மட்டுமே!
கடல் சூழ்ந்த!
என் நாட்டிற்கொருமுறை!
வந்துபோ...!
உன்போன்ற பிறவிகளுக்கு!
நாயாவதே பெரிய சாதனை!
தானென்பேன். பிற்பாடு,!
மனிதனாவதெப்படி என்று!
பார்க்கலாம்...!
!
காலன்,!
வீட்டுக்கதவை தட்டும்!
எட்டத்தில்தானிருக்கிறாய் என்பதை!
மறவாதே என்றென்றும்...!
இடைப்பட்ட குறுகிய நேரத்தில்!
உயிர்களிடத்தில் அன்பு செலுத்த!
கற்றுக்கொள்...!
பாகுபாடு பார்ப்பின்!
அதற்கும் உன் நாட்டிலேயே!
உன்னை எதிர்க்கவும் மக்கள்!
இருப்பார்கள் என்பதையும்!
மறவாதே என்றென்றும்

ராம்ப்ரசாத்