இலாபகரமான முதலீடு!
அரசியல் கட்சி தொடங்குவது.!
எனதூர் சொறி நாய்கள் கூட!
உழைக்கத் தயாராகிவிட்டன!
புதிய கட்சிகள் திறந்து!
நாய்களுக்குப் பேரானந்தம் நக்குவது.!
சமூகத்தின் மார்க்கத்தின் பெயர்களை அடுக்கி !
ஊருக்கொரு கட்சி!
கட்டி முடித்துக்கொள்ளுமிச் சொறி நாய்கள்.!
பேராசை, “தேசியத் தலைவர்” கொம்பு!
முளைக்க வேண்டுமென்ற.!
மூன்று நான்கு அமைச்சு, வர்சையாய் வாகனங்கள் !
அரசாங்க அரண்மனைச் சுகங்களாகியவற்றை !
துப்பனி வழிய நக்குவதற்கென்றே!
நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டலைகின்றன. !
பெரும் பாதுகாப்பு கையிலொரு கட்சி.!
வேசையோடு நடுத்தெருவில் படுத்தாலும் !
தலைவராயிருந்தால் “பத்வா” வழங்கிப் பாதுகாப்பார்கள் !
சமூகத்தைச் சிங்களக் கட்சிகளிடம் !
பெரும் விலைக்கு ஏலமிட்டு !
மொத்தத் தொகையையும் சுருட்டலாம்.!
வாய் பேசவே மாட்டார்கள்!
தேசியப் பட்டியலுக்கு காசு கட்டிக் காத்திருப்போர்!
கள்ளன், காவாலி, பொண்பிடியன்களை !
அதியுயர்; பீடத்திற்கு நியமித்தாலும் !
ஆதரவுக் குரல் தர !
முண்டியடித்து வருவார்கள் அடிவருடிகள் !
கழுதை பன்றிகளை காசுகொடுத்து வாங்கி!
சில சொறி நாய்கள் !
கூட்டமைப்பு சேர்த்து கொண்டாடிக் குதிக்கின்றன!
முஸ்லிம் !
முதலமைச்சர்!
சுயாட்சி!
தனித்தரப்பு இவ்வவசியங்களை !
மாங்காய் தேங்காய் மண்ணாங்கட்டிபோல் பரப்பி வைத்து!
வீதியோர வியாபாரம் செய்வதற்கு !
பொருத்தமான கட்சி கூட்டமைப்புத்தான்!
மாகாணத்தின் பெயரில் சுயேட்சை கட்சி தொடங்கினால்!
கூட்டு வியாபாரம் புரிந்து சம்பாதிக்க இலகு!
படித்த எருமை மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள !
எம்பி ஆசை.!
அரசியல் கட்சி ஆரம்பிப்பது உண்மையில் !
ஆதாயமான பங்குச் சந்தை வியாபாரம்!
உம்மா பெயரில் இன்றைக்கு! !
முஸ்லிம் அரசியல் கட்சிகள் !
நாளை முளைக்கும்!
கள்ளப் பொண்டாட்டிகளின் பெயர்களில்
எம்.எல்.எம். அன்ஸார் -இலங்கை