நாடு கடந்த தமிழீழ அரசு - ப. கரிகாலன்

Photo by Tengyart on Unsplash

வகையறுந்த நம்முறவுகள் நசுக்கப்படும் போது!
உலகம் எம்மை வேடிக்கை பார்த்தது-ஏனெனில்!
நமக்கொன்று ஓரசலில்லை !
முட்கம்பி வேலிகளும் முள்ளிவாய்க்கால்களும்!
எம்முரிமைகளை தட்டி பறித்தன-ஏனெனில்!
தட்டி கேட்டோர் நசுக்கப்பட்டனர் !
சின்னாபின்னமான உடல்களும்!
சிதறிய தேசமும் எம்மை அச்சுறுத்த!
போவதில்லை--ஏனெனில்!
அவை அழியாத கொடூர வடுக்கள் !
நம்மினத்தின் அழிவில் -குளிர்காயும்!
சிங்கள தேசத்தின் எக்காளம்!
ஒரு நீர்மேல் குமிழிதான்-ஏனெனில்!
தமிழினம் ஒன்றிணைந்து விட்டது !
நாடு நாடாய் அகதி வாழ்க்கை!
தேவைதானா எம்மினத்திற்கு இன்னும்!
நம் தலைவன் ஊட்டி வள்ர்த்த தமிழீத்தீ!
உலகெங்கும் பரவிட!
அவன் காட்டிய வழியில் சென்று - நாம்!
தமிழீழ அரசொன்று அமைத்திடுவோம்
ப. கரிகாலன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.