ஒரு பழைய நாற்காலியின்!
உடைந்த காலொன்று!
மிகவும் கவனத்துடன்!
பொருத்தப்பட்டிருக்கிறது!
உடைந்த நாற்காலி என்று!
சொல்லிக் கொள்ளவில்லை!
ஆயினும்!
உடைந்து விடும் என்பது!
நிச்சயமே!
உன் இருப்புக்கும்!
அதன் இருப்புக்கும்!
இடையில்!
இருப்பின் தவிப்பாய்!
என்னொரு மனம்