ஆசிரியர் பெயர்; நிர்மல்!
---------------------------------------------!
பாசி படர்ந்து ஈரம் கட்டும்!
மொட்டை மாடியின் வாசனையுடன்!
அவளும் நானும் ஈரமுமிருந்த!
மழை ஒய்ந்த ஒருநாளில்!
முன்னை போல் நீயில்லையென்றாள்!
மாடியின் சிதறிய எச்சங்களாய்!
மனதில் நினைவிருக்க!
மாறி போனது நம்முறவென்றாள்!
எச்சங்கள் மேல் தங்கும்!
ஈரந்தான் உள்ளிறங்கும்!
ஈரமடி நம் உறவு!
என்றென்றும் உள் உண்டு!
காய்ந்தாலும் காய்வதென்றும் மேல்பரப்பில்!
இதமான குளிரோடு!
உன்னன்பின் ஸ்பரிசங்கள்!
என்னுள்ளே என்றுமுண்டு

நிர்மல்