நாங்கள் மதச் சார்பற்றவர்கள், !
ஆனால் மதக் கலவரங்கள் !
மட்டும் நடப்பதுண்டு . !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் அமைதிப் !
பூங்காவில் வசிப்பவர்கள் ; !
ஆனால் குண்டுகள் !
தவறாமல் வெடிப்பதுண்டு ; !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் உலக !
சமாதானத்தை விரும்புகிறவர்கள் ; !
ஆனால் பிருத்வியும் !
அக்னியும் இங்குண்டு ; !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் கட்டுக்கோப்பானச் !
சட்டம் உடையவர்கள் ; !
ஆனால் கற்பழிப்புக்கள் !
காவல்நிலையத்திலும் உண்டு. !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் பெண்மையைக் !
காத்துப் போற்றுகிறவர்கள்; !
ஆனால் ...... !
தொட்டில் குழந்தைத் 'திட்டம் உண்டு ; !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
நாங்கள் பகிர்ந்துண்ணும் !
பழக்கம் உடையவர்கள் ; !
ஆனால் நதிநீரில் மட்டும் !
அதற்கு விலக்குண்டு ; !
நாங்கள் சீர்திருத்தவாதிகள் . !
சீர்திருத்தம் பற்றி !
மேடையில் வாய்க் கிழிய !
பேசுபவர்கள் ; வீட்டில் பெண்களை !
மட்டும் பூட்டி வைப்பதில் வல்லவர்கள் ; !
நாங்கள் இந்தியர்கள்
சரஸ்வதி பாஸ்கரன், திருச்சி