1.பொம்மையாதல்...!
உன் ஆதிக்கத்தை!
முழுமையாக!
தாங்கிக்கொண்டு!
நிழலாக தொடர்கிறது!
என் நிஜங்கள்...!
மிகச்சிறந்த ஓவியத்தை!
தனதாக்கிவிட்ட பெருமையில்!
வலம் வரும் உன் காலடியில்!
சிதைந்த ஓவியமாய்!
நசுங்குகிறது!
என் விருப்பங்கள்..!
என் பதில் எதிர்பாராத!
கேள்விகளுடன் துளைத்தெடுக்கும்!
உன் முன்னால் ஒரு!
பொம்மையாக தினம்தினம்!
உணர்வற்றுப்போகிறது!
என் பெண்மை.!
!
2.பூக்களில் உறங்கும் மெளனங்கள்...!
உன்னிடம் மென்மை!
எதிர்பார்த்து ஏமாந்து!
முள்ளில் விழுந்த பூவென!
நான் துடிக்கும் தருணங்களில்!
தட்டானின் சிறகுகளை!
பிய்தெரியும் ஒரு சிறுவனைப்போல்!
எவ்வித குற்றவுணர்வுமின்றி!
எனை ஆட்கொள்கிறாய் நீ.!
ரசனைகளும் எதிர்பார்ப்புகளும்!
நசுங்கியதில் வார்த்தைகளிருந்தும்!
ஊமையாகிறது என் பெண்மை.!
ஆயுதமற்ற போர்க்களத்தின்!
தினம் தினம் பூக்கள் சுமந்து!
வந்து சருகாகித் திரும்புகிறேன்.!
கானல்நீரில் எதிர்நீச்சலடிக்க!
இயலாமல் விடியலுக்காக!
காயங்களுடன் காத்திருக்கிறேன்!
பூக்களில் உறங்கும் மெளனமாக.!
-நிலாரசிகன்.!
!
-- !
அள்ளித்தர நட்புடன்,!
நிலாரசிகன்.!
தமிழுக்கு நிலவென்று பேர்
நிலாரசிகன்