தசம் ரசம் - நீச்சல்காரன்

Photo by Tengyart on Unsplash

[லிமரைக்கூ] !
வறுமையால் கல்லைக்கட்டி !
விழுந்தப் பின் தெரிந்தது !
கிணற்றுக்குள் தங்கக்கட்டி!
ரேஷன் அரிசி விலை சரிவு!
மூட்டைக் கடத்துபவர்கள்!
வாழ்வு இனி உயர்வு.!
வேற்றுமையில் ஒற்றுமை கொஞ்சம்!
எங்கு சென்றாலும் இந்தியாவில்!
புரிந்துகொள்ளும் ஒரே மொழி லஞ்சம்!
சந்தோசமாக விலங்குகள் சரணாலயம்!
பார்வையாளர்கள் குறைந்ததால் !
வருத்தத்துடன் மனிதரின் முதியோராலயம்!
எங்கள் சார்பாக அனுப்பினார்கள்!
பதினேழு கோரிக்கைகள்.!
எங்கள் சார்பாகவே அமுக்கினார்கள்.!
பட்டுடுத்தும் அந்தக் குழுக்கள் !
ஆடையைப் பிச்சை வாங்குமிடம் !
அம்மண பட்டுப் புழுக்கள் !
மழைநீரை சேமிப்போம்!
மண்தரையை மாசாக்கி!
இப்பதாகையை மட்டும் காமிப்போம்!
குழந்தைகளுக்கு மூச்சு சிக்கும்!
காரணம் எரிக்கப்படும்!
பிளாஸ்டிக் விஷத்தை கக்கும்!
இழக்கவில்லை எந்தவொரு சேதாரம்!
மீனவர்களை எண்ணிப்பாருங்கள் !
யாருமில்லை உயிருடன் ஆதாரம்
நீச்சல்காரன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.