மக்களின்மனதில் மாற்றம்தனைக் கொண்டுவரவே!
மாற்றங்களின் மூலமே வாழ்க்கையின்!
ஏற்றங்களை கற்றுத்தரவே புதிதாய்பிறக்கும்!
விக்ருதிஆண்டே வருகநீ ஏற்றம்பல தருகநீ!!
கல்லாமை கடன்வறுமை இல்லாமையாகிட!
எல்லாமும் வழங்கியே ஏற்றம்தந்திட!
நல்லார்மட்டுமே இவ்வுலகில் நடைபயில!
நல்லாசிகள் வழங்கிடவே வருகநீ!!
அப்பழுக்கற்ற அரசியல்வாதிகள் அரசாள!
அனைவரும் போற்றும் அதிகாரிகள் வழிகாட்ட!
அனைத்துலக நாடுகளில் நம்பெருமை நிலைநாட்ட!
சித்திரைத் திருநாளே வருகநீ!!
கணினிஉலக யுத்தத்தில் எனதினிய!
கனித்தமிழும் காலூன்றி கோலோச்ச!
கண்ணிமைக்கும் பொழுதினிலே உலகமெலாம்!
கற்கண்டு வாழ்த்துகூறவே வருகநீ

கவி.செங்குட்டுவன், ஊத்தங்கரை