ஒற்றைப்பனை,!
வஞ்சகமில்லா நெடுவளர்த்தி!
காற்றுக்கு காவோலை கழண்டால்!
மாற்றமில்லாமல் தாண்டும் நூறடி !!
ஆடுமாட்டமும் கரியவுருவமுமாக !
மின்னலொளியில் பார்த்தால் ,!
மயிர்கூச்செறியும் மழையிரவுகளில்!
அதிகாலை அப்பாவியாய் நிற்கும் ,!
கூடுவிழுந்து காகம் போனபின்னே !
வீடாக்கி கொண்டது அணிலொன்று வட்டை !!
கரையான் தின்ன இறங்கிவரும் அணிலை ,!
இரையாக்க காத்திருக்கும் கடுவன்பூனை !
வெள்ளைதான் ,மனசெல்லாம் கள்ளமதுக்கு ,!
காத்திருப்பும் தப்பித்தலுமாக !
அணிலும் பூனையும் கொஞ்சகாலம்...!
பாணியதிகம் பழத்தில்,!
அணிலோ பருவத்தில் கோதிவிடும் _அம்மாவின் !
ஏச்சு சிலவேளை அணிலுக்கும் விழும்!!
பாணியெடுத்து பனாட்டு போடுவதைவிட !
பணியாரம் சுடுவதை வழக்கமாக்கியிருந்தாள்!!
கொக்காரை பன்னாடையென்று !
எதுவிழுந்தாலும் தொட அனுமதிப்பதில்லை !
புருனைசிலந்தியிருக்கும் என்று சொல்லி ,!
தட்டிதானெடுத்து வைப்பா !!
மாடு முதுகுதேய்க்கவும்_சிலகாலத்தில் !
கொடிகட்டி புகையிலை போடவும் ,!
எப்பவாவது சாய்ந்துகொள்ளவும்,_அவதிக்கு !
அப்பாடா என்றுஒன்னுக்கு அடிக்கவும் !
போனதைதவிர பலவேளைகளில் !
ஒற்றையாகவே .............!!
இப்போதெல்லாம் நினைவில் !
தினமும் வந்துதொலைக்கிறது!
அந்த ஒற்றைப்பனைமரம் .............!
ஓ வென்று அழவேண்டும் போலிருக்கிறது , !
தனிமையை எண்ணி
நேற்கொழுதாசன்