ஒரு ராத்திரி!
ஒரு கோடி இரவுகளாய்!
கடினப்பட்டு என்னைக் கடந்தது!
மெல்லமாய் விழித்துப் பார்த்தேன்!
விடியல் தூங்கிக் கொண்டிருந்தது!
இதயம் விதிமுறை மீறி!
வலது பக்கமாய்த் துடித்தது!
சுவர்க் கடிகாரம் மட்டும்!
எனக்குத் துணையாய் விழித்திருந்தது!
ஆனால் ஒவ்வொரு முறை!
நகர்ந்தபோதும்!
அதன் நொடி முள் என்னைக் குத்தியது!
பிறந்தபோது என் தாய் கண்ட வலி!
இறப்பன்று நான் காணப்போகும் வலி!
ஒன்றாய் இரண்டையும் சேர்த்து!
அனுபவித்துக் கொண்டிருந்தது!
என் நெஞ்சம்!
காலையில் சந்திக்கப் போகும்!
கணக்குப் பரிட்சையை எண்ணி
முத்தாசென் கண்ணா