யாருடையோ நிழலாம் நான்!
சில நேரங்களில்!
தாத்தா பாட்டி!
பல நேரங்களில்!
அப்பா அம்மா!
ஆசிரியர் நண்பன்!
இப்படியாக…!
நகல்களை கிழித்தெறிந்து!
நான் நானாக!
கடக்க முயன்ற!
என்னை!
திமிரானவன்!
பைத்தியம்!
என்கிற!
முகமூடிகளை!
அணிவித்து!
காறி உமிழ்ந்து!
தூக்கிலிட படுகிறேன்…!
சாம்பலை மீன்கள் திண்ற!
மூன்றாம் நாள்!
எனது புகைப்படத்துக்கு!
தங்க பதக்கம் அணிவித்து!
கருத்தரங்கில் ஆய்வு கட்டுரைகள் !
சமர்ப்பிப்பதை !
மீன் தொட்டியிலிருந்து!
பார்க்கிறேன்!
மீன் குஞ்சுகளாக…
முருகன் சுப்பராயன்