இவ்வுலகின்
அதிஅற்புதமான
கவிதை...
என்
தோளில் சாய்ந்து
சிரித்து கொண்டிருக்கிறது
பிறந்த குழந்தையின்
பிஞ்சு விரல்களின்
மென்மையை
தீண்டாமலேயே அறிந்திருக்கிறேன்....
உன் வார்த்தைகளில்
மழைக்காலங்களில்
உனக்கு
குடை வாங்கித்தர
பிரியப்படுகிறது
என் மனசு
ஆனால்
எப்பொழுதும் போலவே
மழையில்
நனையவே
பிரியப்படுகிறது
உன் மனசு
உன்
திவ்விய தரிசனத்திற்காக
பவ்வியமாக
காத்துக்கொண்டிருக்கிறது....
அடியேனின் உயிர்
வெட்கத்தால்
நிரம்பியிருக்கும்
உன்
முகத்தைப்போலவே
காதல்
சொர்க்கத்தால்
நிரம்பியிருக்கிறது
என் அகம்
உன்
அழுகையைக்கூட
அதிசயித்தே
பார்க்கும்
என் காதல்சகியே
சமையல் செய்யவும்
கோலம் போடவும்
துணிகளைத் துவைக்கவும்
கூடிய விரைவில்
கற்றுக்கொள்கிறேன்.....
நீயும்
என்னை
காதலிக்க கற்றுக்கொள்-
மாமதயானை