ஆதியில் அன்பு போதித்தாலும்!
அதன் பின் அடுப்பெரிக்கவோ!
அல்லது நடுநிலைப்பள்ளி!
வாத்தியார்களின் கையில்!
பிரம்பாகவோ போய்விட்டன!
போதிமரங்கள்.!
பாழடைந்த கோயிலின் உடைந்த!
இடுக்குகளுக்குள் அடைப்பட்டுக்!
கிடக்கும் ஆயிரமாயிரமாண்டு!
ரகசியங்களைப்போல்!
உண்மைகள் யாவும் குண்டடிப்பட்டு!
உடலெங்கிலும் கேலிச்சித்திரமென!
ஊமையாய் படிந்துக் கிடக்கின்றன.!
தூரத்து வெடிச்சத்தம் கேட்டு!
கலைந்து பறக்கும் மரக்கிளைப்!
பறவையின் மனநிலையில் கழிகின்றன!
நாட்கள்,!
!
நாரைகள் வந்தமரும்!
குளங்களும் வற்றி போய்விடினில்!
தேரையன குழிக்குள் அமிழ்ந்து!
உயிர் மீட்ட பழகிக்கொள்ளுதல் சித்தம்.!
!
நாளைய விடியல் சாத்தியமற்றவை!
என்றாலும் இவ்விரவை கடக்க!
நட்ச்சத்திரங்கள் துணையுண்டு
ஆ.முத்துராமலிங்கம்