வேல் முருகா!
மால் மருகா!
இப்போதும் !
நாமருகா....?!
முருகனுக்கருகெனில்!
ஒருவனுகொருத்தி விடுத்து!
உறவெனக் குறத்தி எடுத்து!
தவறெனத் தெரிந்தும் எனை!
மறவெனச் சொன்னது ஏன் இறைவா?!
நம்பிக்கை தகர்த்து!
தும்பிக்கை துணையுடன்!
வள்ளிக்கை அணைத்தாயே!
அப்பனின் அரையுடல் !
தத்துவம் மறந்தாயே...!
!
வேடனாய் வேடமிட்டு!
வள்ளியை வீழ்த்துமுன்!
அ(ன்)ம்பினாற் எனை வீழ்த்தி!
நம்பினார் கெடுவதில்லையென்ற!
நாடகம் ஏனய்யா!
நீயே சொல் வேலய்யா...?!
அவதாரமென!
அரிதாரமிட்டாய்!
மறுதாரமேற்றால்!
முதல்தாரம் நிலைபற்றி!
ஒரு தரமேனும் யோசித்தாயா?!
தினையுண்ண போனது!
வினையென்று நீயுரைத்தால்!
உனை அடைந்த!
மனையொன்று வாடுமே என!
நினைத்தாயோ நற்கணவா...?!
!
-- கோ.சிவசுப்ரமணியன்

கோ.சிவசுப்ரமணியன்