வளமிருந்தும்!
பசுமையில்லையே பஞ்சாப்பில்!
என்ற ஏக்கத்துக்கு!
விடையளித்து!
ஊக்கமாய் செயல்பட்டு!
பசுமைப்புரட்சிக்கு!
பக்க உதவியாய் செயல்பட்ட!
பச்சைத்தமிழன் காமராசருக்கு!
சிலை வைத்து அழகுபார்த்த!
சீக்கிய மண்ணே !!
அவன் தொப்பூள் கொடி உறவுகொண்ட!
ஈழத்தமிழனைக் கொல்ல!
ஆயுதம் கொடுத்த...!
தேவையெனில்!
இன்னும் அள்ளிக் கொடுக்க தயார்!
என அறிவிக்கும்!
மன்மோகன்சிங் செயல்பாடுதான்!
சீக்கிய நன்றியா ?!
சாகட்டும் இந்திய இறையான்மை
அ.இளஞாயிறு