பொது வெளி என்றான தருணங்களில்!
எது அந்தரங்கம்?!
நான் என்னுடன்.!
நான் உன்னுடன்.!
நாம் நினைவுகளுடன்.!
கவிதைக்கான குறிப்புகள்!
கனவுகளில் கவிழ்வதைப் போல்!
கவிழ்கின்றன.!
பிறிதொரு நாளில்!
பிரபஞ்சப் பாழ்வெளியில்!
எனக்கான கவிதைகளில்!
உனக்கான குறிப்புகள் இருக்கும்.!
எனக்கான மரணத்தில்!
யாரும் அறியா!
உன் கண்ணீரின் ஈரத்துளிகளில்!
கவிதையும் முற்றுப் பெறும்
அரிஷ்டநேமி