குத்தி வைத்த நெல்லிலே!
கிடைத்த ஆழாக்கு அரிசியும்!
உலையில தான் கொதிக்குது!
குச்சு வீட்டு குடிசையில்!
கடைந்தெடுத்த வெண்ணெயில்!
செய்த பருப்பு பாயசம்!
ஊரு முழுக்க மணக்குது!
மச்சு வீட்டு மாடியில்!
ஆக்கி வைத்த சோற்றையே !
எட்டு பாகம் ஆக்கிட!
எத்தனம் தான் நடக்குது!
குச்சு வீட்டு குடிசையில்!
பத்து வகை பட்சனம்!
வயிற்றுக்குள்ளெ ரொப்பிட!
பிரயத்தனம் தான் நடக்குது!
மச்சு வீட்டு மாடியில்!
ஆழாக்கு சோறுமே!
அரை நொடியில் மறைந்திட!
ஈரத் துண்டும் காயுதே!
ஏழை மக்கள் வயிற்றினில்!
செய்த பாதி பண்டத்தை!
உண்ண யாரும் இல்லையே!
வீனாக கிடக்குதே!
தெரு ஓர குப்பைத்தொட்டியில்!
அரை வயிற்று கஞ்சி தான்!
குடித்திருந்த போதிலும்!
ஆனந்தமாய் தூக்கமும்!
அரை நொடியில் வந்ததே!
பலகாரம் பல உண்டு!
வயிறடைத்து போனதால்!
பஞ்சு மெத்தை சுகமிருந்தும்!
உறங்க முடியவில்லையே !
-- கீதா ரங்கராஜன்

கீதா ரங்கராஜன்