இரவு விடிய நான் காத்திருப்பதே,
விடியலில் உனக்காக காத்திருக்கத் தானே.
----------------------------------------
நான் கவிதை எழுத
உன் காதல் தேவை இல்லை கண்மணி.
என் காதல் தோல்வி போதும்.
----------------------------------------
இந்த வழ-வழ அமெரிக்க சாலை எல்லாம்,
உலகிலேயே அழகான உன்
தெருவிற்கு சமமாகுமா? :-)
----------------------------------------
உன் பிரிவில் வாழாமல் இருக்கும் சக்தி எனக்கு உண்டு.
ஆனால்,
உன் வருகை வரை சாகாமல் இருக்கும் சக்தி என்னிடமில்லை...
சீக்கிரம் வந்து விடு...
----------------------------------------
அடிப்பாவி, உன் மந்திரம்
இந்கும் பலிக்கிறதே,
இந்த அமெரிக்க பேனாக்கள் கூட
உனக்காக தமிழ் கவிதைகள் எழுதுகின்றன பார்..
----------------------------------------
அட, 'Bread'-யிலும், 'Juice'- யிலும்
எப்படித்தான் வாழ்கிறானோ
என்று கவலைப்படதே,
நான் வழக்கம் போல்
உன் நினைவிலும், கனவிலும் தான் வாழ்கிறேன்...
----------------------------------------
இசையும், மதுவுமே
இரவாகிப் பொன இந்த ஊரில்,
நான் மூழ்க இசையும்
ஒரே மது நீதான்...
----------------------------------------
ஒளி