முகமூடி - இரா. பி

Photo by FLY:D on Unsplash

மனிதனைத் தேடி ஒரு பயணம்!
அவன் முகமறியாது!
முகவரி தெரியாது!
அவன் யார் என யாரும் கேட்டால்!
பதில் சொல்ல முடியாது !
ஒரு முறை கண்ட சுவடு!
மனதில் குழம்பிய பிம்பமாய்!
மனிதன் யார்?!
மாசற்ற மனதுடன் இருப்பானா?!
மறுபடியும் அவனைக் காண்பேனா? !
வாழ்க்கைப் பயணத்தில் வழிப்போக்கன் குறுக்கிட்டு!
மனிதன் முகமூடி அணிந்திருப்பான் என்றான்!
எதற்காக என்ற கேள்விக்கு விடையில்லை !
ஒரு வேளை, மனிதன் தன்னை மாற்றிக்கொண்டானோ!
மற்றவருடன் சேர்ந்து வாழ?!
தனிமை விரும்பாதவன்!
தனித்துவம் இழந்துவிட்டான்…!
இரா. பி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.