இயலாமை - இரா. பி

இயலாமை - Tamil Poem (தமிழ் கவிதை) by இரா. பி

Photo by Pawel Czerwinski on Unsplash

கண் முன்னே கொடூரங்கள்!
அன்றாட வாழ்வில் அத்தியாயமாகி!
இயலாமை எனும் அரணின் பின் மறைந்து!
இரக்கம் ஒரு சொல்லாக!
நீதி ஒரு துணுக்காக!
மனிதம் ஒரு புறம்; மனிதன் மற்றொரு புறம் !
காலத்தின் போக்கில் வாழ்வைக் களித்து!
அநீதி கண்டு பொங்கி எழுவது அநீதி என்று!
நீதி அளக்கும் தராசில்!
ஒரு புறம் கனம்; மறுபுறம் கனக்கும் மனம் !
எப்போதாவது என ஒரு சொல் சாபத்துடன்!
வாழ்வில் முற்றுப்புள்ளி அற்று!
தொடரும் பல சாபங்கள்!
இயலாமைதான் வாழ்க்கையோ?!
India T-shirts - Buy Indian Flag Collections

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in
  • Manikandan Manickam Avatar Manikandan Manickam - 1 வருடம் முன்

    அழகிய கவிதை......இயலாமையின் வெளிப்பாடு....