சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும்
இடையில் ஓர் திரிசங்கு வாழ்க்கை
காலையில் மலர்ச்சியும்
மலையில் அயர்ச்சியும்
எங்கள் முகங்களில் மட்டுமல்ல
மனங்களிலும் தான்!
ரத்த சம்பந்தம் இல்ல
ஓர் சமத்துவகுடும்பம்,
பம்பரமாய் சுழலும் வாழ்க்கையில்
பாசத்திற்க்கு எங்கே நேரம்!
எங்கள் பாசம்கூட
காசுக்கான வே-ஷம்
போல் தோன்றுகிறது!
எங்கள் முகங்களிலும்
சிரிப்பு வரும்
வேலை ஒன்று சிறப்பாய் அமையும் போது
சிகப்பாய் மாறும் முகமும் உண்டு
வேலையில் கவனம் சிதறும் போது!
இங்கே பகிறப்படுவது உணவு மட்டுமல்ல
மனங்களும் தான்!
விடுப்பில் சென்றலும் கூட
வேற்றிடம் பார்த்து புன்னகைக்கிறோம்!
போட்டி பொறாமை
நமக்குள் இருந்தாலும்
இதுவும் ஓர் புனிதமான உறவுதான்,
நம் அலுவலக நட்பு

ஈஸ்வரி