மாயம் ஏதும் நிகழுமா ?
மனித மனங்கள் மாறுமா?
இம்மாநிலம் ரட்சிக்கப்பட போவது
மனிதனாலா ? இறைவனாலா?
ஆண்டு பட்ஜெட்டில் பாதி
இப்பாவிகளின் அக்கறை
வங்கிக் கனக்குகளில பதுங்கின,
இரண்டாம் கணக்கு எழுதி
இந்நாட்டு தொழிலதிபர்கள்
இவர்கள் பங்குக்கு புண்ணியம்
சேர்த்தனர்.
கடத்தல் காரர்களும், அரிதாரம்
பூசுபவர்களும், இவ்விஷயத்தில்
அரசியல்வாதிகளுடன் போட்டி.
கருப்புதான் இவர்களுக்கு
பிடித்த கலரு. இக்கருப்பை
இக்கரைக்கு திருப்பினால்
பதினைந்து ஆண்டுகளுக்கு
வரியில்லா பட்ஜெட்தான்.
இவைகளை நம் பார்வைக்கு
கொண்டுவர தேவைப்பட்டது
ஒரு விக்கிலீக்ஸ்,
பாபா ராம்தேவும் அண்ணாவும்
இவைகளை சுட்டிக்காட்டினர்
வந்து விழுந்தன நரகல் வார்த்தைகள், .
தூங்குவது போல பாசாங்கு
செய்யும் பிரணாபை நம்மால்
எழுப்பமுடியவில்லை.
இந்தவுலகில்தான் இருக்கிறோம்
என்ற நினைவுகூட இல்லாமல்
இருக்கிற மன்மோகன்.
இறைவன் புது அவதாரம்
எடுப்பானா ? இந்தியா
காப்பாற்றப்படுமா?
இது என் கேள்வி.... பதில்?
வாழ்க பாரத மணித்திருநாடு
ராமு குமாரசுவாமி