01.!
கருக்குகள் !
---------------------!
சமையலறையிலும் !
சைவம் அசைவமென!
சமைக்கும் சட்டிகளிலும் !
சாதிகள்வைத்தோம். !
மாட்டைத்தொழுபவன் !
மனிதனைத்தின்கிறான்!
மாட்டைத்தின்பவன்!
மனிதனைத்தொழுகிறான் . !
சுற்றிவரக்கடலிருநதும்!
கடற்தொழிலாளி கறிவைப்பது!
தகரத்தில் அடைக்கப்பட்டமீனில். !
கங்கையை,நதியை!
கடலுக்குப்பாய்சும் நாட்டில்!
என்றும் குடிநீர்ப்பஞ்சம் !
தெனனாசியாவின் !
அரசியல் விளையாட்டரங்கு!
இலங்கை. !
கடவுளின் கைகளில்!
ஆயுதங்கள் !
அவரவர் தற்பாதுகாப்பிற்காக. !
02.!
இரசிகர்கள் !
---------------------!
மரத்திலிருந்து!
ஒருகிளையையேனும்!
ஒடிக்கப்பயமாயிருக்கு,!
மர உரிமையாளன் ஏசுவானென்று... !
கடிக்கவரும்!
நாயைஅடிக்கவும் பயமாயிருக்கு,!
நாயுரிமையாளன் அடிக்கவருவானென்று... !
மனிதனைவதைப்பதும் கொலைசெய்வதும்!
மிகச்சுலபமாயிருக்கின்றது !
யாரும் கேட்கமாட்டார்கள்!
யாருக்கும்பயப்படத்தேவையில்லை . !
கொலைசெய்பவன்!
பெரியமனிதனாய்,சாதனையாளனாய்!
மதிக்கப்படுகிறான்,போற்றப்படுகிறான்!
விரும்பியோ விரும்பாலோ!
நட்புகள்சேர்கின்றன. !
தமிழ்ச்சினிமாவில்!
ஒருவனைஒருவன் !
அரிவாளால் வெட்டி!
வாளில்வடியும் குருதியை!
விரலால்வழித்து !
மீண்டும்வெட்டி !
குருதிமுகத்தில்த்தெறிக்க ... !
கலையைக்கொலையாக்கி!
சினிமாவினூடாக !
கொலையைக்கலையாக்கி...!
கலைஇரசனை கொலைஇரசனை !
பழக்கமாகி வழக்கமாக!
அதுவேவாழ்வாகி!
கொலை இரசிகர்களாகிவிட்டோம்
ஈழநிதி