தை பிறந்தால் வழி பிறக்கும் - எதிக்கா

Photo by Paweł Czerwiński on Unsplash

கனத்துப் போன இதயம் !
மெல்ல இளகியது !
புத்துணர்வோடு !
காத்திருந்தோம் !
இப் புத்தாண்டின் !
வருகைக்காய் !
தை பிறந்தால் வழிபிறக்கும் !
வழமைபோல் மீண்டும் !
நெஞ்சில் ஒரு ஆதங்கம் !
பொங்கலோடு பொங்கலாய் !
இனிவரும் ஆண்டுகளும் !
பொங்கிடட்டும் !
அஞ்சிப் பயந்து !
அடங்கி ஒடுங்கிப் !
போன தமிழினமும் !
பொங்கட்டும் !
பொங்கல் பானையின் சூடு !
ஆறும் முன்னே !
பொங்கியெழும் !
மக்கள் படை !
நல்லதொரு முடிவைக் காணட்டும் !
கண்ணீரை மட்டுமே !
கண்ட கண்கள் எல்லாம் - அக் !
கண்ணீரிலும் ஒரு ஆனந்தத்தைக் !
காணட்டும் !
இவ்வாண்டின் !
நிறைவின் முன் !
தமிழ் அன்னையின் !
பிரசவம் !
சுகப் பிரசவம் ஆகட்டும் !
தமிழீழம் பிறந்ததென்று !
தமிழ்ழினம் !
ஆனந்தகக் கூத்தாடட்டும்... !
- - எதிக்கா
எதிக்கா

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.