தேடித்தடவுகின்றன உன் தெய்வீகம்!
உணர்ந்த விரல்கள்!
அருகில்லாததை அறிந்த மனதின் அறியாமையோடு!
தூக்கம் தொலைந்த இரவை சபிக்கிறது!
உன்னைப் பிரிந்த நினைவு!
புரண்டு படுக்கும்போது!
காதோரம் சுற்றும் கொசுக்கள்!
முன்னெப்போதும்!
உன் அரவணைப்பால் தாங்கள்!
அந்நியப்பட்டதை என்னிடம்!
உரத்துப் பாடுகின்றன!
சுழலும் மின்விசிறியின் இறக்கைகளோ!
நீயில்லாது களையிழந்த அறையில்!
சுழலும் அவஸ்தையில் புலம்புகின்றன!
உன் சொற்களில் மூடிக்கொண்டு விறைக்கின்றன!
ஜன்னல் வழி உள்நுழைந்த நிலவொளி!
பரிகசித்து சிரிக்கிறது!
என்னைப் பிரிந்த உன்னைப் பார்த்தபடி

சு.துரைக்குமரன்