தனிமையின் வெப்பம் ஒரு செதில் போல!
உட்டியுலர நீ கோடையை கடந்தாய்!
அல்லது கோடையில் கடந்தாய்!
நரம்புகளினுள் ஊசிதுளைக்கும்!
ஒற்றைக்கோடை - பிரிந்தேன்!
நிராகரிப்புகள் அதிகமாகி உனை கைவிட்டுப்பிரிந்தேன்!
பிரியும் போதே கோடையெனைச் சுட்டது-கோடை என்பது சுடும் உண்மை!
பிரிந்தேன் பிரபஞ்சமுருக!
கோடையென்பதொரு அவசியான பொய் - மீண்டும் மெல்ல!
அழைக்காமல் அழைத்தாய்!
இருந்தும் உன் நிராகரிப்பில் சிறு திசுக்கள் எரிந்ததுண்மை - பிரிந்தேன்!
வானம் அழுதும் ஓயாத கோடை!
எனை முண்டி விழுங்கக் கசிந்துலர்ந்தேன்- அன்பே பிரிவு என்பது!
கோடையின் தன்மை!
எனை நீ மறுத்தாயெனப் பிரிந்தேன்!
நீயற்றபின் எனை பார்த்து!
யாருமே கோடையில் பிரிவதில்லை

ஆதி பார்த்தீபன்