கவி ஆக்கம்: அகரம் அமுதா!
நெஞ்சம் வளர்ந்து இடையகம் தேயும்!
நிலவே! திரைகடல் போய்வரவா?!
கஞ்சன் வழங்கிய தானம் போன்ற!
கனிமொழி யே! நான் போய்வரவா?!
பனிமலரே! பூம் பஞ்சனையே! உன்!
பார்வையின் எல்லை கடந்திடவா?!
கனிமரமே! பொன் ஊஞ்சலுமே! நல்!
கற்பகமே! விடை கொடுத்திடு வா!
எல்லா நதியும் மலையில் தோன்றி!
எழுகடல் தானே முடிகிறது உன்!
பொல்லா நதியோ விழியில் தோன்றிப்!
பொதிகையில் சென்றேன் முடிகிறது?!
குளத்தில் தானடி குமுதம் மேவும் - செங்!
குமுதத்தில் ஏன் இருகுளங்கள்?!
நிலத்தில் வீழும் மின்னல் போலென்!
நெஞ்சில் உன்னால் கலவரங்கள்!!
அழுதது போதும் அடியே பெண்ணே!!
வுழிகின் றகண்ணீர் வற்றிவடு!!
விழுதென நீள்கிற தெந்தன் கண்ணீர்!
செழுகடல் இதழால் ஒற்றியெடு!!
பிரிவுத் துயரம் உனக்கும் உண்டே!
பிரிவே உறவுக்கு வழிவகுக்கும் - இதழ்!
பிரியா மொட்டுக்கள் மணப்பது மில்லை!
பிரிந்தால் தானடி மலர்மணக்கும்!
ஆண்டுகள் இரண்டு போனால் வருவேன்!
அதுவரை அன்பே! நிலைக்கனு மதனால்!
எனையுங் கொஞ்சம் வாழவிடு!!
கவி ஆக்கம்: அகரம் அமுதா
அகரம் அமுதா