01.!
புது காய்ச்சல்!
-----------------!
கண்களிலே கட்டி!
நாக்கு கொஞ்சம் கெட்டி!
நடந்தால் வலி ....!
நாளை என்னாகுமோ?!
உடம்பு மண்ணாகுமோ ...!!
விடிந்ததும் சொன்னான்.!
நொடியினில் பரவும் காய்ச்சலாம்!
ரைஸ் கூட!
வைரஸ் ஆகியது..!
எலும்பு எல்லாம்!
கரும்பாய் உடைய!
ஏதோ ஒன்று!
ஊசலாடி ஓயிந்தது...!
சுமக்க நாலு பேரில்லாமல்!
சுமைகள் கூடி!
சுடுகாடாய் ஆனது உலகம்!
!
02.!
என்னை மீறிய ..!
-------------------!
எழுத்துகளிலே !
நீ,!
என்னை மீறிய கவிதைகள்.!
நம்பிக்கையில் !
நீ,!
என்னை மீறிய நடப்புகள்.!
உணர்விலும் உள்ளத்திலும்!
நீ,!
என்னை மீறிய நினைவுகள்.!
முழுதாய்!
நீ,!
என்னை மீறிய நான்
கீர்த்தி