விமானம் - ஆ.முத்துராமலிங்கம்

Photo by Tengyart on Unsplash

சிறு பிராயத்தில்!
அலாதிப்பிரியம் விமானங்கள் மீது.!
!
வெகு உயரத்தில் குச்சியாய் செல்லும்!
விமானத்தை பலமுறை பார்த்தும் அதன்!
ஆச்சரியம் குறைந்ததில்லை.!
!
சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது கூட!
அதன் இறைச்சல் கேட்டு!
வெளிமுற்றத்திற்க்கோடிவந்து!
பார்த்திற்கின்றேன்.!
!
கோவில்கொடையில்!
சந்தையில் எங்கும் என்!
விளையாட்டுப் பொருளில் முதன்மை!
வகித்தது விமானம்.!
!
சில தினங்களுக்கு முன் கூட!
அதன் நினைவுகள்!
பூட்டிய என் உதடுகளுக்குள்!
சிறு புன்னகையை மிச்சம் வைத்திருந்தது.!
!
ஆனால் இன்று என் பிள்ளைகள்!
விமானச்சத்தம் கேட்டதும் ஓடிச்சென்று!
பதுங்குக்குழிக்குள் புகும் அவலம் பார்த்து!
அறைகின்றது! விமானம் ரசித்த என் நெஞ்சை.!
!
விமானம் குறித்த என்!
ரசனையும், ஆச்சரியமும்!
கைநழுவி விழுந்த பீங்கான்!
கோப்பையைப் போல!
உடைந்து சிதறிவிட்டது.!
!
பாட்டி சொல்லும் பேய் கதைகளைப் போல்!
பயத்தை நிறப்புகின்றது விமானங்களும்!
அதன் செயல்களும்.!
!
-ஆ.முத்துராமலிங்கம்!
சாலிகிராமம்
ஆ.முத்துராமலிங்கம்

Related Poems

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.