தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பரணிலிருந்து பேசுகிறேன்

சத்தி சக்திதாசன்
பத்திரப் படுத்தி வைத்தே விட்டார்கள்!
பாத்திரம் ! பழைய பாத்திரம் ! என்னை!
பரணின் நடுவே பாதுகாப்பாய் -- ஆம்!
பரணிலிருந்துதான் பேசுகிறேன்!
!
எத்தனை எத்தனை விதமான சமையலை!
எப்படியெல்லாம் என்னுள் ஆக்கி - தீயில்!
எப்போதும் வதக்கி தாம் அறுசுவை கண்டனர்!
எப்படிச் சொல்வேன் ? இப்போது நானும்!
எப்போதும் ஓய்வில் ... பழைய பாத்திரம்!
அம்மா பசிக்குது என்றே ஓடிவரும்!
அத்தனை குழந்தைகளும்!
அடியே ! சமையல் ஆச்சா என்றபடியே!
அதிகாரத்துடன் வரும் கணவனும்!
ஆர்வத்துடன் விழிகளை அலைத்து!
ஆவலாய்த் தேடுவதும் என்னையே!
அப்போது , அறிவீர்களோ.....!
இப்போது நான் பழைய பாத்திரம்!
ஆம் நான்!
பரணிலிருந்துதான் பேசுகிறேன்....!
தீயினால் சுட்டபுண் ஆறவோ என்னை!
நீரினில் தேய்த்துக் கழுவுவது என்றே நான்!
நாட்கள் பல திகைப்பதுண்டு - இன்று!
நாதியற்று பரணின் மேலிருந்து!
நானும் பாடுவது பழைய பல்லவியோ ....!
விருந்தினர் வரும் போதெல்லாம் - அவர்கள்!
வயிறு நிறைக்க பண்டங்கள் படைத்தேன்!
விருந்தினர்கள் இன்றும் வருகிறார்கள்.... ஆனால்!
நானோ .... பரணின் மேல் பழைய பாத்திரமாய்!
அம்மா பசிக்குது ... என்றே ஒரு குரல்!
அழுகையுடன் வாசலில் ஒலிக்கையில்!
அடுக்களைக்குள் நடக்க முடியாமல் நான்!
அவர்கள் நெஞ்சில் கருணை மறந்தே!
அடித்து விரட்டுவர் அப்பிச்சைக்காரனை!
அழுவேன் மனதினுள் ஏனென்றால்!
என் உணர்வுகளுக்கு மட்டும் நடக்கும்!
சக்தியுண்டு என்பதால்!
வசதி படைத்தோர் நண்பர்களாம்!
வயிறு நிறைய இணவு படைப்பார்!
வருந்திக் கொண்டே நான் தீயில்.....!
வேடிக்கை என்ன தெரியுமா? இன்று!
வேண்டாத பொருளாய் பரணிலே நான்!
ஆம் !!
நான் பரணிலிருந்துதான் பேசுகிறேன்!
காதில் மெதுவாகக் கேட்குதோர்!
உரையாடல்!
கண்களில் பார்வை மங்கிய!
அவ்வீட்டின் தந்தையை!
கூட்டிச் செல்கிறார்களாம்!
வயோதிபர் இல்லத்துக்கு!
மனதுக்குள் சிரித்தேன் ....!
ஆம் நான் வாய்விட்டுச்!
சிரிக்க முடியாத பாத்திரம் தானே ...!
ஆனால் ஆண்டன் படைப்பினில்!
அன்பற்ற இவர்களும் பாத்திரங்கள் தான்.....!
தம்மை வாழவைத்த தெய்வத்தை!
தயாராக வயோதிபர் இல்லத்துக்கு!
தடையின்றி அனுப்பும் இம்மனிதர்!
கேவலம்.... பழைய பாத்திரம் எனக்காவா...!
பரிதாபப் படப் போகிறார்கள்....!
ஆமாம்....!
இதுதான் வாழ்க்கை...!
அந்த வய்தானவரும் இனி!
பரணிலிருந்துதான் பேசுவார்...!
காதுகளைக் கூர்மையாக்குங்கள்!
ஏனென்றால் அவரிடமிருந்து கொட்டப்போவது!
அனுபவ முத்துக்கள்!
அறியாதோர் மூடர் அவர்கள் பெயரும்!
மனிதர் தானோ ?!
ஆமாம்!
நான் பரணிலிருந்துதான் பேசுகிறேன்!
!
-சத்தி சக்திதாசன்

தேடல்

ஓ.சுபாசு
எனக்கு முன்பே யாரோ !
சென்றிருக்கிறார்கள் !
கடலை நோக்கி !
காலடித் தடங்கள் !
யாரும் இல்லை !
எதிரில் !
என்னைப்போல் !
நீரை !
மிதித்துவிட்டு !
திரும்பிவிட !
நினைத்திருந்தால் !
என்னை நோக்கி !
வந்திருக்கும் !
பாதச் சுவடுகள் !
கடலைத் தாண்டும் !
முயற்சியில் !
வீழந்திருப்பார் !
கடலுக்குள் !
யோசித்துத்தான் !
செல்லவேண்டும் !
வா என்று !
அழைக்கும் அலையை !
நோக்கி

சொர்க்க பூமி

இமாம்.கவுஸ் மொய்தீன்
வீரத் தலைவனின்!
விவேகத்தில்!
நிகழ்ந்த!
தவறு!!
விலை போனவர்களால்!
வீழ்ச்சியடந்தது!
நாடு!!
இன்றோ!
(நா)நேச நாடுகளின்!
ஆக்கிரமிப்பில்!
கற்பு முதற்கொண்டு!
எல்லாமே கொள்ளை போகிறது!
அல்லது!
விற்பனையாகிறது!!
ஆக்கிரமிப்பாளர்கள்!
'சொர்க்க பூமி ஆக்குவோம்' !
என்கிற தம் வாக்குறுதியை!
நிறைவேற்றி இருக்கிறார்கள்!!
'ஈராக்'!
அவர்களுக்குச்!
சொர்க்க பூமியே!!
-இமாம்.கவுஸ் மொய்தீன்

நெஞ்சோடு புலம்பல்

அகரம் அமுதா
கடலூர் அருகே தாழங்குடாவைச் சேர்ந்த ரேவதி பரங்கிப்பேட்டையருகே சின்னனூர் தேவநாத் இருவருக்கும் திருமணம் நடந்தது. முதலிரவில் வைத்து தாம்பந்திய உறவை வீடியோ படமாக மாப்பிள்ளையும் மாப்பிள்ளையின் மாமனும் எடுத்திருக்கின்றனர். மணப்பெண் போலீசில் புகார்.!
பத்திரிக்கை செய்தி!
கல்லான கடவுள்களா!
இல்லாம போனிகளா?!
கொல்லாம எனக்கொல்லும்!
கொடுமய கேட்டிகளா?!
!
சிறுக்கிக்குப் பொறந்தமவ(ன்)!
சீமைபோய் வந்தமவ(ன்)!
படுத்துயெனை படமெடுக்க!
பழிநேரப் பாத்திகளா?!
!
மானத்தக் காப்பவனே!
மானத்தப் பறிச்சாக்கா!
மூனு முடிச்செதுக்கு?!
மொறயான ஒறவெதுக்கு?!
!
நாலு சொவெரெதுக்கு?!
நல்லிரவுந் தானெதுக்கு?!
நாலுசனம் பாக்குதுன்னு!
நாணமுண்டா நாய்களுக்கு?!
!
தாய்காணா இடமெல்லா(ம்)!
நாய்காண விட்டேனே!
வேசிக்குப் பொறந்தமவ(ன்)!
மோசத்தச் செஞ்சானே.!
!
எட்டி இதழ்கடிச்சிக்!
கொத்திக் கனிபறிச்சி!
முட்டி உயிர் நசுக்கி!
மூனுமொற ஆனபின்னெ!
!
நாலுகண்ணும் தூங்கயில!
நல்லிரவும் போகயில!
மூனுகண்ணு விழுச்சிருக்க!
மொதமொதலா பாத்ததென்ன.!
!
காத்தும் தீண்டாத!
கட்டழகு பாகமெல்லாம்!
‘காமிரா’ மொய்ததென்ன!
கண்சிமிட்டிப் பாத்ததென்ன.!
!
வெடுக்குன்னு எழுந்தென்ன?!
மேலாடை அணிஞ்சென்ன ?!
பொசுகுன்னு போனஉயிர்!
போன வழி மீளலையே!!
!
கத்தி அழுதேனே!
கதவொடைச்சிப் பார்த்தேனே!
பொத்தி அழுதேனே....!
பொலம்பித் தீத்தேனே...!
!
ஒதவிக்கு ஊருசனம்!
ஓடிவரக் கூடலையே...!
கதறி அழுதாலும்!
காமராக்கண் மூடலையே...!
!
தாயப்படம் பிடிச்சபின்னே!
தாரமெனப் பிடிச்சானே?!
தாய்க்குப்பின் தாரமுன்னு!
தாய்மொழியும் சொல்லிடுதே!!
!
காரி உமிந்த்திட்டும்!
கையெடுத்துக் கும்பிட்டும்!
ஓடி ஒளிஞ்சானே!
ஒளிஞ்சிபடம் பிடிச்சமவ(ன்)!
!
அருந்ததி பாத்தேனே!
வருந்தொயரம் பார்தேனா?!
அம்மி மிதிச்சேனே!
அசிங்கத்தக் கண்டேனா?!
!
கால்விழுந்து வணங்கயில!
கள்ளப்புத்தி அறிஞ்சேனா!
மேல்விழுந்து ஆடயில!
விபரீதம் ஒணந்தேனா?!
!
கருவோடு இருக்கயில!
கள்ளிப்பால் கொடுக்காம!
தொட்டிளில கெடக்கயில!
தொண்டக்குழி நெரிக்காம!
விட்டவளைச் சொல்லோனும்!
விடங்கொடுத்துக் கொல்லோனும்!
வட்டியோடு முதலாக!
வாய்கரிசி போடோனும்!
!
கட்டிலில சாஞ்சவனே!!
கட்டையில போறவனே!!
பொத்திவெச்ச அழகையெல்லா(ம்)!
ப்ளுபிலிம்மா எடுத்தவனே!!
!
நேரடி ஒளிபரப்பா?!
நாளக்கு ஒளிபரப்பா?!
சின்னத் திரையினிலா?!
சினிமா தேட்டரிலா?!
!
சண்டாளி எம்மானம்!
தவணையில போயிடுமா?!
சம்மன்கண் சொத்தாட்டம்!
சட்டுன்னு போயிடுமா?!
!
நாளைக்கு விடிஞ்சாக்கா!
நாலுசனம் கூடிடுமே!
நாலுசொவர் நடந்தகத!
நாஞ்சொல்ல நேர்ந்திடுமே!
!
சாயாத கதிராட்டம்!
தலைநிமிர்ந்து பார்த்திடுமே!
செய்யாத பிழைக்காக!
சிரம்தாழ்த்தி நிக்கனுமே!
!
உள்ளத உள்ளபடி!
ஒப்பாரி வைப்பேனா?!
ஒளிச்சு அதமறச்சி!
ஒருவாறு சகிப்பேனா?!
!
எமனப் பெத்துவிட்டு!
எம்மேல ஏவிவிட்டு!
செவனேன்னு மூளையில!
சாஞ்சிவிட்ட சண்டாளி!
!
“கியாஸ்”தான் விலையதிகம்!
கேட்டாக்கா தரமாட்டா!
மண்ணெண்னை கொஞ்சோண்டு!
மனமொவந்து தாராயோ?!
!
உசுரோட எம்மானம்!
ஒசரத்தில் பறக்கயில!
பழுதும் கெடக்கலியே!
பரண்இட்டு நான்தொங்க..1!
கவிஆக்கம்: அகரம்அமுதா

சில ஹைக்கூ கவிதைகள்

A. தியாகராஜன்
கரு வானம்!
வெளியே தனியே!
ஒரு மிதக்கும் இலை!
-------------------------!
பள்ளி முடிவு-!
தனியேவொரு பல்லி!
கரும்பலகையருகில்!
--------------------------!
முதியோர் இல்ல மாலை-!
எனது முதல் கடிதம்!
தந்தையின் டைரியில்!
-------------------!
நீண்ட நாள்-!
நிழல்கள் ஊர்கின்றன!
நத்தை வேகத்தில்!
------------------!
சூர்யோதயம்-!
தாமரையிலை மஞ்சமென!
ஒரு பாதரசத்துளி-!
--------------------!
சிறு தூறல்-!
பால்கனி கைப்பிடியில்!
முத்து வரிசை!
-----------------------------!
திடீர் தூறல்-!
ட்ரம் இணையும்!
ஓட்டுனரின் பாடலுடன்!
----------------------!
----------------------!
நெடுஞ்சாலை-!
முன் செல்லும் கார் தூக்கிச்செல்லுகிறது!
மதிய சூரியனை!
-----------------------!
விடியல்-!
அவனுடன் எழுகிறது!
ஒரு வண்ணத்துப்பூச்சி!
-----------------!
by A.Thiagarajan- !
Originally published by the author in English in Haiku Harvest Vol. 6, No. 1 - Spring & Summer 2006; and later compiled in the book Haiku Harvest 2000-2006 -Compiled and edited by Denis M. Garrison

கல்லறைக்குள் கண்மணிகள் !

வல்வை சுஜேன்
இறையாண்மை மிக்க இலங்கையென!
இன்னும் எத்தனை காலம்தான் !
ஏமாந்து கிடப்பாய் தமிழா!
துயிலும் இல்லங்களும் !
உழுது அழிக்கப்படுகிறது இங்கே !
ஊசி முனை நிலத்திற்கும்!
உரிமை இல்லாதவன் தமிழன்!
ஆறடி நிலத்தினை !
ஆட்சி கொள்வதோ என !
நூலகப் பொதிகையாய்!
அடுக்கப் பட்ட எங்கள் !
ஆத்ம ஜோதிகளை!
துயிலும் இல்ல பெட்டகங்களை உடைத்து!
அழிக்கின்றான் பேரினவாதச் சிங்களவன் !
கண்களை விற்று காட்சி வாங்குவதோ!
கல்லறை என்று சொல்லி !
எங்கள் கண்மணிகளை நாம் இழப்பதோ!
தாயகக் கனவொன்றே இவர்கள் தாகம்!
தன்மான உயர்வொன்றேதான் !
இவரின் உயரிய வேதம்!
இறந்தவர் என்றால் !
கல்லறை என்போம்!
விதைக்கப் பட்டவர்கள் இவர்கள்!
விழி மூடி துயில்கின்றனர்!
தூயவர்கள் துயில்கொள்ள !
ஓர் இல்லமும் இல்லை யென !
கொல்லும் மனிதாபமும் இல்லாதோரிடம் !
இன்னும் மண்டி இட்டு கிடப்பதோ தமிழா !
எழடா எழடா எம் உறவே!
எரிமலைதான் நீயும் எழு கனலே!
அடிமை என்பவர் இனியும் இல்லை!
அடிபணி வாழ்வே உலகில் துயர். !

புரிந்தது புரியாமல் போனது

க.அருணபாரதி
தேர்வுக்காக படிக்க !
விடுமுறை விட்டார்கள்!
கல்லூரியில்...!
வீட்டிற்கு செல்லாமல் !
விடுதியிலேயே நீயிருந்ததால்!
நானும் கல்லூரியிலேயே!
தங்கினேன்!
படிப்பதற்காக(?!)!
மனதில் மட்டுமல்லாமல்!
வெளியிலும் !
மழைக்காலம் என்பதால் !
பகலிலும் இருட்டாக!
சுருங்கிக் கிடந்தது !
வானம்!
அந்த வானத்தின் !
நிழற்குடையில்!
தேர்வுக்கு படிக்க!
வந்தாள்!
என் தேவதை...!
யாருமில்லா !
வகுப்பறையில் !
புத்தகப் பக்கங்களை விட!
அவள் புன்னகை !
பக்கங்கங்ளைத் தான்!
அதிகம் படிக்கமுடிந்தது..!
புரியாத பாடங்களுக்கு!
என்னிடம் விளக்கங்கள்!
கேட்டாள் அவள்..!
விளக்கிய பின்!
புரிந்ததாக சொன்னாள்..!
அதுவரை புரிந்துவந்த!
எல்லாபாடங்களும்!
கல்லூரிபாடம் உட்பட!
புரியாமல் போயின!
எனக்கு!
அவள் விளக்கம் கேட்டத் !
தருணத்திலிருந்து....!
!
-க.அருணபாரதி

பலிபீடங்களில் மரணிக்கும் நியாயங்கள் !

மெய்யன் நடராஜ், டோஹா கட்டார்
நாங்கள் உழுதவயலில் !
எங்களுக்காக உண்ண !
பசுமையாய் ஏதுமில்லை . !
எல்லாம் நீங்கள் !
எடுத்தது போக !
வைக்கோலும் தவிடும்தான். !
விளைந்த தென்னையில் !
இளநீரும் ,தேங்காயும் !
இன்னோரன்னவைகளும் !
நீங்கள் எடுத்ததுபோக !
கழிவுகலாய்ப்போன !
பிண்ணாக்கும் சக்கைகளும் !
மட்டுமே எங்கள் உணவாய் !
மாடாய் உழைக்கிறோம் என !
நீங்கள் சொல்லிக்கொண்டபோதும் !
உங்களுக்காய் உழைத்த !
எங்களுக்கும் வேதனைகள் !
உங்களிலும் அதிகம். !
வாயில் நுரை தள்ள !
வண்டி இழுத்தும் !
வாய் ருசிக்க உண்ணாமல் !
வரண்டுபோயிருக்கும் !
எங்கள் கழிவிலும் !
வாழ்ந்துகொண்டிருக்கும் !
நீங்கள், !
ஒரு நாள் எங்களையே !
கழிவாக்கி விடுகின்றீர்கள். !
எங்களுக்கும் கூட கொடுக்காமல் !
உங்களுக்காக பால் கொடுத்த !
எங்கள் அன்னையரின் !
மடிசுரப்பை மறந்துபோகும் !
நன்றி கெட்டவர்கள் அல்லவா நீங்கள். !
நீங்கள் கைவிட்ட பின்னாலும் !
தெய்வம் எங்களை !
கைவிடாது என்றுதான் !
பிரார்த்தித்தோம் . !
வாழ்தலுக்கான !
எங்கள் பிரார்த்தனைகளையும் !
மரணத்துக்கான !
அவர்கள் பிரார்த்தனைகளையும் !
ஒரே நேரத்தில் கேட்கும் இறைவன் !
கசாப்புக் கடைக்கே !
முன்னுரிமை வழங்கும்போது, !
பலிபீடங்களில் மரணிப்பது !
நாங்கள் மட்டுமல்ல !
மாடுகள் எங்களது நியாயங்களும்தான்!!

பாதுகாத்திடுவோம்

லலிதாசுந்தர்
உறைந்த பனிகட்டிகள்!
உருகிக் கொண்டிருக்கின்றன!
பாய்ந்துஓடும் ஆறுகள்!
வறண்டு கொண்டிருக்கின்றன!
உலகின் உயர்வெப்பநிலையை அறிய!
வேண்டும் - ஓர் புதியகருவி!
வளிமண்டல வடிகட்டி!
ஓசோனை ஓட்டையாக்கினோம்!
என்ன தந்தோம்!
நம் சந்ததியினருக்கு!
முடியுமோ இன்னுமொரு செயற்கை பூமி!
பாதுகாத்திடுவோம் இயற்கை பூமியை!
- லலிதாசுந்தர்

பிரிவின் பொழுது பெய்யும் பெருமழை

எம்.அரவிந்தன்
விடைபெறும் நாளில்!
பெய்த மழை!
கிளப்பிவிட்டது!
மண் வாசனையோடு!
ஏதேதோ நினைவுகளை.!
கண்ணாடி ஜன்னலில்!
மழையின் ஈர விரல்கள்!
இட்ட கோலப்புள்ளிகள்!
கண்ணீர் துளிகளின்!
பிம்பங்கள் ஆயின.!
இதமான குளிர்!
சுகமாக்கியது!
நினைவுகளை.!
மழையுடன் வேகமெடுத்து!
பெய்தன நினைவுகள்.!
பெருமழை!
அரித்துச் சென்றது!
சில கோபங்களை!
சில வன்மங்களை!
பிரிவின் வாட்டத்தை!
இதப்படுத்தவே!
அமைந்தன போலும்!
சில வார்த்தைப் பறிமாற்றங்கள்!
சில உதவிகள்!
சில மன்னிப்புகள்!
சில மௌனங்கள்!
சில நிகழ்வுகள்.!
அனைத்தையும் ஈரப்படுத்தி!
புதுப்பித்தது மழை.!
நினைத்து நினைத்து!
சடாரென பெருமழையாகவும்!
ஆசுவாசப்படுத்திக்கொண்டு!
கொஞ்சம் தூறலாகவும்!
மாறி மாறிப் பெய்த மழை!
நின்றுப்போனது!
வானத்தை வெளுப்பாக்கிவிட்டு.!
அடுத்த மழை!
எப்போதென!
யாருக்கும் தெரியாது