தமிழ் கவிதைகள்

தமிழ் கவிதைகள்

பிரிவு உபச்சார விழாவில்

தென்றல்.இரா.சம்பத்
11.03.1995 கல்லூரி விடுதி & வணிகவியல் துறை பிரிவு உபச்சார விழாவில் :!
--------------------------------!
கவி எழுதச்சொல்லி!
கண்ணடித்துக் கட்டாயப்படுத்திய!
என் காதலர்கள்!
உறவா! பிரிவா!என!
வழி சொல்லாமல்!
வழி மாறியதால்!
இரண்டைப்பற்றியும்!
எனக்குப் பழக்கமான!
எளிய தமிழில்!
எழுதி வந்திருக்கிறேன்!!
ஏற்ப்பீர் என்ற நம்பிக்கையிலே.....!
எத்தனையோ!
கவி எழுதக் காத்திருக்கும்!
என் எழுதுகோலுக்கு!
என்ன வந்ததோ!!
உங்களுக்காக !
எழுத ஏடெடுத்தவுடன்!
கண்ணீரையல்லவா!
காணிக்கை கேட்கிறது..!
உறவு...!
இனிமையானதுதான் !
பிரிவு - நமக்கு!
புலப்படாத நாள்வரை!
நட்பு...!
நல்ல சொல்தான்!
நாம்- இந்த!
கல்லூரி இறுதிநாளை!
கடக்காதவரை!
சீசனுக்கு வந்துபோகும்!
பறவைகளைப்போல!
படிப்புக்கு வந்துபோகும்!
நமக்கு!
இந்த கல்லூரியும்!
ஒரு வேடந்தாங்கல்தான்...!
சீசன் முடிந்துவிட்டது!
சல்லாபித்த நாம்!
சிறகு விரித்துத்தான்!
ஆக வேண்டும்.!
சிந்துவது கண்ணீரானாலும்!
உன்மேல் விலுவதெல்லாம்!
பன்னீராகட்டும்...!
பிரிவை எண்ணி!
ஏன் வருந்துகிறாய்!
பிரிவு உனக்கொன்றும்!
புதியதல்லவே...!!
பிரிவுக்குப் பிறகுதானே !
ஓர் உறவும் இருக்கிறது...!
ஓர் உயர்வும் இருக்கிறது...!
தகப்பனிடமிருந்து பிரிந்து!
தாய் வயிற்றில் உறவு கொண்டாய்!
தண்ணீர் வடிவத்திலே!
அங்கே- உனக்கு!
உறவும் கிடைத்தது!
கரு என்ற !
உயர்வும் கிடைத்தது...!
தாய் வயிற்றிலிருந்து பிரிந்து!
தரையோடு உறவு கொண்டாய்!
சிசுவின் வடிவத்திலே!
அங்கே- உனக்கு !
உலகோடு உறவும் கிடைத்தது!
குழந்தை என்ற !
உயர்வும் கிடைத்தது...!
இப்படி!
உன் ஆரம்பமே பிரிவில்தானே !
அரங்கேறியிருக்கிறது!
அப்புறம் ஏன் வருந்துகிறாய்!
இப்பிரிவிற்க்காக...!
சந்தோசப்படு!
மூன்றாண்டுகளுக்குள்!
எத்துனை நல்ல உள்ளங்களை!
நட்பாக்கிக்கொண்டோம் என!
சந்தோஸப்படு...!
வருத்தப்படு!
மூன்றாண்டாய்!
இன்னும் இத்துனை!
உள்ளங்களை!
அறிய முடியவில்லையேவென!
வருத்தப்படு...!
இப்படியெல்லாம் எழுதி!
எனக்கே நான்!
ஆறுதல் சொன்னாலும்!
என் அடிமனம் மட்டும்!
அழுகையை நிறுத்த மறுத்து!
அடம்பிடிக்கிறது!
ஆம்!
கையடிந்த பின்னாலே!
கை வளை கேட்பவளாய்!!
பிரிவை வெளியே !
நிறுத்திவிட்டு!
உறவோடு இங்கே!
புலம்பிக்கொண்டிருக்கிறேன்...!
!
விரல்போன நேரத்தில்!
வீனை வாசிக்க !
ஆசை வந்தவனாய்!!
பிரிவு வரும் வேளையிலே!
உறவுக்காக ஏங்குகிறேன்...!
விடுதி நாள் !
எனச்சொன்னபோது!
என் விலாஎலும்புகளும்!
விழாக்கோலம் பூண்டது!
அதுவே நமக்கு!
பிரிவுரை நாள்!
என நினைக்கும்போது!
நெஞ்சத்தில் !
நேறிஞ்சி முள்ளல்லவா!
நிமிடத்திற்கொருமுறை!
மோதிச்செல்கிறது...!
இரயில் சிநேகமாய்!
நம் உறவு இருந்திருந்தால்!
நயமோடு சொல்லியிருப்பேன்!
நட்பின் அடையாளங்களை..!
இங்கே நம் இதயங்கள்!
சிநேகமானதால்!
என்னவென்று எடுத்துரைப்பேன்...!
மூன்றுநாள் !
கல்யாணவீட்டு நட்பென்றால்!
நட்பை நளினப்படுத்தி!
பாட்டெழுதலாம்!
ஆனால் மூன்றாண்டு!
கல்லூரி நட்பானதால்!
வெட்க்கத்தோடு !
ஒப்புக்கொள்கிறேன்!
நம் காதலைச் சொல்லி!
கவி எழுத - எனக்குத்!
தெரியவில்லையென்பதை...!
என் உள்ளங்களே !!
மரங்களுக்கு மரணம்!
இலையுதிர்க்காலமல்ல...!
உரசுவதால் அவமானம்!
தங்கத்திற்கல்ல...!
ஆம்...!
வீழ்ச்சியுற்ற அருவிதானே !
நதிகளானது...!
விதை விழுந்துவிட்ட பிறகுதானே!
செடிகளானது...!
காய்ச்சப்பட்ட இரும்புதானே !
ஈட்டியானது...!
கரும்பு கசக்கப்பட்ட பிறகுதானே!
வெல்லமானது...!
!
அப்படித்தான்!
நம் உறவுக்கு மரணம்!
இந்த பிரிவுமல்ல...!
இந்த சின்னப் பிரிவுக்குப்பின்னே!
நமக்கு உயர்வும் வந்து சேரும்..!
நம் உறவும் தொடர்ந்து வரும்...!
என !
என் வார்த்தைகளை!
முடிக்கும்முன்!
இன்னுமொருமுறை!
உரக்க உரைத்துக்கொள்கிறேன்!
மரங்களுக்கு மரணம்!
இலையுதிர்க்காலமல்ல...!
நம் உறவுக்கு மரணம்!
இந்தப் பிரிவுமல்ல

அந்த வாழ்க்கை

புஸ்பா கிறிஸ்ரி
முளை கட்டிய விதை மண்ணில் விழுந்து!
மஞ்சள் முளையாகி, மண்ணை நிறைத்து!
பச்சை நிறமெடுத்து பச்சை ஆடை கட்டிட!
நிலமகளும், நலமுடனே நிறம் காட்டிட!
துள்ளித் திரிந்த அந்த நாட்கள்...!
வாயக்கால் தண்ணீரில் காகிதப் படகு விட்டு!
காலாலே தண்ணீர் அடித்து விளையாடி,!
மாமரத்து அணில் போட்ட, மாங்காய் கடித்து!
மாலை வெய்யில் மஞ்சள் நிறம் ரசித்து,!
நாளை விடியலுக்கு காத்திருந்த அந்த நாட்கள்...!
குளத்து நீரில் ஓடி ஆடி விளையாடிக் குளித்து,!
களத்து மேட்டில் ஆட்டம் போட்டு,!
நினைத்ததைச் செய்து, நிம்மதி கண்ட!
அந்த நாட்கள் என்று வருமோ ?!
வண்ணக் கனவுகளில் எண்ணம் மறந்து,!
சின்னக் குழந்தைகளாய் ஆடிக் கழித்த!
அந்த வாழ்க்கை இனி வருமா?

பிரிவின் நீட்சி

அறிவுநிதி
“அறிவுநிதி”!
புதுப் புது அவதரிப்புகளாக!
ஓவ்வொரு பயணமும்!
கையசைக்கத் தாமதித்து!
கலங்கிய கண்களைத் திருட்டுத்தனமாக!
துடைத்துக் கொண்டும்!
சிரிக்க முடிகிறதே சில சமயங்களில்!
அழுகையை அடிமனதில்!
அடக்கிக்கொண்டு வார்த்தை வராமல்!
முகம் கோணி தலையசைத்து!
விடைபெறும்போது!
விருட்டெனச் சிந்தும்!
சில கண்ணீர்த் துளிகள்!
கவலையில் முகம் சோர்ந்து!
கவலைபடாதே எனச் சொல்லும்!
தோரணையில் ஒவ்வொன்றும்!
உறவுக்குள்ளும் நட்புக்குள்ளும்!
மனதை விட்டுவிட்டு!
வாழ்வை கோபிக்க முடியா!
பட்சமாய!
தொலைவாய் சென்று!
திரும்பிப் பார்க்கும் கணங்கள்!
ஈரம் படாத இதழ்கள்!
வறட்டுப் புன்னகையில்!
கை குலுக்கி!
விடை கொடுத்த முகங்கள்!
அதே இடத்தில் எல்லாம்!
புள்ளியாய்க் கண்ணில் கரைய!
விசும்பும் இதயத்தோடு!
பயண நடுவில் இமை மூடி!
தூங்கும் பாவனையில்!
பின் நோக்கி உருளும் நினைவுகள்!
எல்லாம்!
சிறு பிரிவாய் சமாதானம்!
கவி: “அறிவுநிதி”

கஜல் 2

ஜாவேத் அக்தர்
கஜல் -2-!
!
மழலைப் பருவத்தில் நாளும் தனித்திருந்தேன்!
மனதின் முடுக்கில் மட்டுமே விளையாடித் திரிந்தேன்!
ஒருபுறம் இமைகளின் பாதுகாப்பு போராட்டம்!
மறுபுறம் வழியும் கண்ணீரின் நீரோட்டம்!
வாழ்க்கை சந்தை மாறுபட்ட மருட்கையானது!
அங்காடியில் ஆசைகள் அடுக்கப்பட்ட அலங்காரமானது!
வலிகளுக்கு நிவாரணம் கொடுப்பது தற்கொலையாகுமா!
மரணத்தின் பேரிடரும் பெருங்குழப்பமும் நீங்குமா!
வலியையும் பிணியையும் உணர்ந்திருக்கிறோம்!
மனமும் இதயமும் சாகிறது இன்று பசியால்!
!
தமிழில்:!
மதியழகன் சுப்பையா

மாயக் கயிறு.. பாறாங்கல்

கிண்ணியா பாயிஸா அலி
01.!
மாயக் கயிறு!
----------------------!
பூண்டு மணமும் குக்கர் விசிலொலியும் தாண்டி!
கனவுகளால் மட்டுமே பயணப்பட முடியும். !
இரைச்சலும் எதிர் கூற்றுகளும் மட்டுமே!
இரைந்து கிடக்கும் செவிப்பறைகள்!
ஒரு மென்மையான பாடலை ரசிப்பதும் !
நீளமான கூர் நகங்கள் பூவாகித் தேன் சொரிவதும் !
கனவுகளுக்குள் மாத்திரமே சாத்தியமாதல் கூடும். !
சதாவும் புழங்கப்படும் கூடமொன்று !
தேய்ந்த கால்தடம் தவிர வேறதைத்தான் பார்த்திருக்கும். !
பறக்கவிட்டிருக்கிறேன் கனவுகளை !
பிரபஞ்சத்தின் எல்லை வரை!
ஒரு காற்றாடி போலே !
பயமேது எரிமலை சாக்கடை பற்றியெல்லாம் !
ஏனெனில்!
தெய்வீகமே நுண்ணிழைகளாகித் திரிந்திருக்குமென்!
காற்றாடியின் மாயக்கயிறு !
வலிமையானதும் உன்னதமானதுங்கூட..!
02.!
பாறாங்கல்!
----------------!
தென்றலின் தொடர்வரவு!
சடாரென நிறுத்தப் படுகையில் !
முற்றம் வெற்றிடத்தாலே நிறைக்கப் படுகிறது.!
புழுக்கமே மிக அடர்வாய் பூத்திருக்க !
ஒரு பூத்தானும் அசையேனென அடம் பிடிக்கிறது.!
வலிய பாறாங்கல்லாய் அடைத்துப் போட்டிருக்கிறாய் வாசற்கதவை!
உன் நீடித்த மௌனங்களால்!
எந்தக் கோலால் புரட்ட எத்தனிக்கலாம் !
எதற்கெனப் புரியாத இப்பாறாங்கல்லை

மௌனம்

அறிவுநிதி
வெற்றிடமல்ல!
புரட்சி!
தனிமையின் பலன்!
ரகசியங்களின்!
தடுப்புச் சுவர்!
தவத்தின் நிலை!
மனதின் பக்குவம்!
சப்தங்களின்!
எதிர்ச் சொல்!
பேச்சுக்களின்!
படுக்கையறை!
காதலில் பிழை!
இயற்கையின் மொழி!
விழிகளின் படிமம்!
சில நேரங்களில்!
சம்மதங்களாகவும்!
சமாதனங்களாகவும்!
கேள்விகளாகவும்!
இறைவனுக்கும்!
மனிதனுகும் இருக்கும்!
தொடர்பு!
கவிஆக்கம்: அறிவுநிதி

பனி காலத்து தேநீர்!

ஜே.பிரோஸ்கான்
அவர்கள் தூரமாக நின்று அழைத்தார்கள்!
செவியுற்றேன்.!
சிரிக்கவும, அழவும் சொன்னார்கள்!
சிரித்துக் கொண்டே அழுதேன்!
பின்!
கண்களை திறந்து கொண்டு !
உறங்கச் சொன்னார்கள்!
உறங்கிக் கொண்டேன்.!
தங்களது ஆறு கால்களைக் கொண்டு !
என் கழுத்தில் மிதித்து விளையாட !
ஆசையென்று மொழிந்து,!
அழுத்தி அழுத்தி ஒருவொருக்கொருவர்!
குழந்தையாகி மகிழ்வுற்றதையும்!
நான் ரசித்துக் கொள்கிறேன்.!
மீதம் வைக்க மனசு இல்லாத!
பனிக்காலத்து த்ரீ ரோஷஸ் தேநீர் போல...!

நாய்களை கண்டால் பயம்

பிரியமுடன் பிரபு
எங்களுக்கு!
---------------------------------------------!
ஒருநாள்!
அழகான இரவின்!
அமைதி குலையும்படி!
எங்கள் குடியிருப்பின்!
வடக்குப் பகுதியில் இருந்து!
தெரு நாய்கள் சில குரைத்தது!
எல்லா நாய்களைபோல!
லொல் லொள் என்றில்லாமல்!
மதம் மதம் என்று அது குரைத்தது!
இது நாய்களிலே ஒரு!
பைத்தியகார நாய் - என்று!
என்ணினோம் நாங்கள்!
நாட்கள் நகர!
நாய்களின் எண்ணிக்கை!
அதிகமானது - ஆம்!
பக்கத்து குடியிருப்பில் இருக்கும்!
பக்குவமில்லாத மனிதர்கள் சிலரும்!
நாயாக மாறியிருந்தார்கள்!
ஆம்!
இந்த நாய்களின்!
மதம் மதம் என்ற மந்திர சப்ததிற்க்கு!
அப்படியொரு சக்தி!
காதுகொடுத்து கேட்போரையெல்லாம்!
மயக்க நிலைக்கு தள்ளி!
நாய்களாய் மற்றிவிடும்!
இப்போ!
மதம் மதம் எனற சப்தம்!
சற்று அதிகமகவே கேட்க்குது!
நாக்கை தொங்கவிட்டபடி!
கூர்பற்களை காட்டும் அந்த!
நாய்களை கண்டு!
மனிதர்களாகிய எங்களுக்கு பயம்!
அவற்றை அடித்து விரட்ட!
ஆசைதான் - ஆனால் எங்களுக்கு!
கடித்து விடுமோ என்ற பயம்!
மதம் மதம் என்று!
குரைத்துக்கொண்டே தங்களுக்குள்ளாக!
அவைகள் அடித்து கொள்கின்றன!
தெருவில் நடக்கவே!
பயமாக உள்ளது எங்களுக்கு!
இன்னும்!
மதம் மதம் என்ற சப்தம்!
கேட்டுகொண்டே இருக்கிறது!
மிக அருகில் , மிக அதிகமாக கேட்கிறது!
பயம் அதிகமாக உள்ளது!
பக்குவப்பட்டவர்கள் குறைவாக !
உள்ளனரோ ?!? - என்று!
பயம் அதிகமாகவே உள்ளது!
சப்தம் கேட்டுகொண்டே இருக்கு!
மதம்.. மதம்.. மதம்.. மதம்..!
-பிரியமுடன்பிரபு

ஏய் என் பேனாவே

செம்மதி
ஏய் என் பேனாவே!!
ஏன் எழுதத்துடிக்கிறாய்?!
என்னை சிறையிலிடப்போகிறாயா?!
இல்லை சிரச்சேதம் செய்யப்போகிறாயா?!
நீதி செத்துவிட்ட தேசத்தில்!
உனக்கு என்ன வேலை?!
அதர்மம் தலைவிரித்து ஆடுகையில்!
உண்மை சொன்னால்!
நீ சிலுவையில் அறையப்படுவாய்!
அல்லது சிறையிடப்படுவாய்!
ஏய் என் பேனாவே!!
போர் நடந்த போர்!
தவிர்ப்பு வலையத்தில்!
கோரமாக கொல்லப்பட்ட!
எம் உறவுகள் பற்றி!
ஏதும் எழுதிவிடாதே!
உண்மை செல்வது குற்றம் என்று!
இருபது என்ன, முப்பது ஆண்டுகளும்!
சிறையிலிடக்கூடும்!
ஐயோ என் பேனாவே!!
செட்டிகுளம் கானகத்தில்!
சீரழியும் எம்மவர் வாழும் வாழ்க்கைபற்றி!
ஏதேனும் எழுதி வைத்துவிடாதே!
சிவராம்,நடேசன் நிலை!
எனக்கும் தந்துவிடாதே!
ஏய் என் உயிர்ப் போனாவே!!
இறுதிப்போரின் இறுதிக்காலத்தில்!
தூய்மையான விடுதலைப்போராட்டம்!
மாசுபடுத்தப்பட்ட!
கதைகளை கக்கிவிடாதே!
முறிந்த பனைமரமாய்!
என்னையும் ஆக்கிவிடாதே!
ஏய் என் நேய பேனாவே!!
சொந்த நாட்டில் வதைக்கப்பட்டு!
தொலைக்கப்பட்டவர்,!
புதைக்கப்பட்டவர்,!
சிதைக்கப்பட்டவர் கதைகளை!
கிறுக்கிவிடாதே என்னையும் வதைத்து!
வீசிவிட வைத்துவிடாதே!
ஏய் என் தூய பேனாவே!!
குற்றமற்ற குற்றவாழிகளாய்!
தமிழராய் பிறந்ததே குற்றம் என்று!
வழக்கும்இன்றி விசாரனையும் இன்றி!
சிறை வைகப்பட்டிருக்கும்!
எம்மவர் பற்றி!
ஏதும் எழுதிவிடாதே!
அதர்மத்தர் கையால்!
என்னையும் அழித்துவிடாதே

புன்னகையின் சாதுர்யை

வெளிவாசல்பாலன்
திறக்கப்படாத கதவின் உட்புறத்தில்!
தொங்கும் ஓவியத்தில்!
வயலெட் புக்களின் நடுவே !
பச்சைச் செடிகளில்!
மறைந்திருக்கும்போது கண்டேன்!
உன்னுடைய முதல்நாள் புன்னகையை!
எவ்வளவு நேரம் அங்கிருக்க முடியுமெனத் தெரியவில்லை!
உனதந்தப் புன்னகை !
ஓவியங்களாகிக் கொண்டேயிருந்தது!
நமக்கருகிலிருக்கும்!
எக்சோறாச் செடிகளுக்கருகில்!
நீ தேரோடுகிறாய்.!
பிரார்த்தனை மண்டபமாய்!
விரிந்த வானத்தின் கீழே!
இரண்டு பட்சிகளின் சலனத்தில்!
நகர்கிறது அந்தக்கணம்!
என்ன தருகிறாய் பருக!
சொற்களினூடே மெதுவாக நகர்ந்து எங்கோ செல்லும்!
சாதுர்யை!
ஒரு யாத்திரீகனை உபசரிக்கும் மாயப் பொழுதில்!
கிளைகளிலிருந்து கடலுக்குத் தாவும் !
உனதந்தத் சிறகுகளை வருடுகிறேன்!
காலம் பொய்யாகிப் போவதில்லை!
எனச் சொல்லிச் சிரிக்கிறது!
உனது புன்னகையும் அந்த எக்சோறாச் செடியும் !
எப்போது விடை பெறுவது !
எப்போது விடை தருவாய்?!
வெளிவாசல்பாலன்