காற்றும் ஒருகணம் வீசமறந்தது!
கடலும் ஒருநொடி அமைதியாய்... போனது...!
தேற்றுவாறின்றி நம் தேசம் தேம்பி நிற்குது!
தேசத்து உறவுகள் எல்லாம் ஊரூராய் அலையுது!
அம்மி மிதித்து அருந்ததி பார்த்து........!
சோடிசேர்ந்த சோடிக் குயில்களின்.......!
மகிழ்ச்சிகள் எல்லாம்.!
இன்று முட்கம்பி வேலிக்குள்...!
முடங்கிக் கிடந்திட!
நான்கு சுவற்றுக்குள்!
நடப்பவை எல்லாம்!
கந்தல் துணியால் கட்டிய முகாமில்.....!
வேட்டை நாய்களுக்கு நடுவில்!
வேதனையுடன் நடக்குது.......!
குளவி முதல் கிளவிவரை....!
மாற்ற ஒர் உடையில்லை...!
அன்றொரு நாள் நம் இளசுகள்!
காத்திருந்து காதல் செய்த!
வீதிகள் எல்லாம்!
வேதனை தாங்கி!
விம்மியே நிற்கின்றன.....!
தண்ணீர் ஊற்றி!
நாம் வளர்த்த நந்தவன!
மரம்,செடி,கொடிகளெல்லாம்...!
உறவுகள் இன்றி!
கோடைபற்றிப்போய் நிற்கின்றன......!
திசைகள் பார்த்துக்!
கட்டிய வீடுகள்!
அரக்கனின் குண்டுமழையிலே!
சின்னா பின்னமாகி!
சிதவுற்ற நிலையில் இன்று!
பேய்கள் உலாவும்!
வீடாகிப் போனது......!
களிவறைமுதல் கொண்டு!
உணவறை வரைக்கும்!
கூப்பன் கடையிகளின்!
வரிசை போல் நிற்குது....!
காரிகையே காத்திரு நான்!
என் கடமையால் வரும்வரைக்கும் என்று!
முத்தத்தால் திலகமிட்டு!
முடிவாக சென்றவனை!
பிரியமுடியாத பிரியமான காதலி!
கையசைத்து விடைபெற்று இன்றும்!
கடைசிவரை காணாத!
உறவுகள் படும் பாடு!
மகிந்தாவே நீ....அறிவாயா.......?!
நாடு,நாடாய் நாங்களெல்லாம்!
ஊனுமின்றி உறக்கமின்றி!
என்ன செய்தி என் நேரம்!
எப்படி வருமென்று தெரியாமல்!
நிமிடத்துக்கு ஓர் தடவை!
தொலைபேசியைப் பார்த்திடுவோம்!
அழவும் முடியாமல் சிரிக்கவும் முடியாமல்.....!
தவிப்பவர்களின் தவிப்புகளை!
என் உள்ளத்து குமுறல்களை...!
எங்கிருந்து யார் அறிவார்....?!
இறுதியாய் தெரிந்துகொண்டோம்!
உலகத்தின் சதிகளினால்!
இன்று தமிழனின் இறப்பு மட்டும்!
தடையேதும் இன்றி!
வரிசைக்கு நிற்காமல்!
மிகவும் வேகமாய் செல்கிறது

யாயினி , கனடா