சூரகுடி பாலா - சென்னை!
பெண்களின் !
திருமண வயதை !
இன்னும் கொஞ்சம் !
அதிகப்படுத்துங்கள்! !
குடிசையில் வாழும் !
கோல மயில்களுக்கு !
இங்கே மாதவிடாய் நின்றும் !
மணமகன்கள் வரவில்லை!! !
இவர்கள் !
இராமன் !
கால்படக் காத்திருந்த !
அகலிகைகள் இல்லை !
இராவணன்களுக்காகக் !
காத்திருக்கிறார்கள் !
கடத்தியாவது செல்வார்களென்று!!! !
தயவு செய்து !
பெண்களின் !
திருமண வயதை !
அதிகப்படுத்துங்கள்

சூரகுடி பாலா, சென்னை