மயானக் குருவியின் இசைக்குறிப்பில்!
எனது குரலின் துடிப்பு !
பதிவுசெய்யப்பட்டிருக்கிறது!
அது !
துயரங்களை அள்ளிவந்த காற்றின்!
இழையறுத்து சுதியும் லயமும் சேர ஆலாபிக்கிறது!
நெஞ்சுக்குள் எரியும் நெருப்பும்!
மீள மீள உயிர்க்கும் துயரங்களுமே!
பாடுபொருளாகின்றன!
கிளைவிரிந்த எனது மன வெளிகளில்!
இன்னும் ஒளியெறிக்கவில்லை!
காற்று வீசவில்லை!
இலட்சிய விம்பமும் !
துன்பியல் சாயமிடப்பட்ட காதலும்!
எண்ணிமுடிக்க முடியாத தோல்விகளுமே!
வாசனையோடு பூத்திருக்கின்றன!
எந்தச் சாமியும் இந்தப் ப+க்களை!
பூசைக்கு ஏற்கவில்லை!
என் வாலிபத்தோடு வலிகளே நெருக்கமாயின!
வலிகளைத் தாண்டி புறப்படும் நேரம்!
மயானத்தின் வெளிகளிலெல்லாம்!
இசைவிரிகிறது!
துயரம் நிறைந்த எனது குரலின் துடிப்புகளோடு!
- விசித்ரா
விசித்ரா