செந்தமிழ் - த.தயாநிதி

Photo by Marek Piwnicki on Unsplash

செந்தமிழ் உறவுகள் சிந்திய சென்னீர்!
சொந்தமாய் தேசம் அமைந்திடத் தானே !!
பைந்தமிழ் தாயின் விலங்கினை உடைத்து!
சுதந்திர ஈழம் அமைத்தவர் வாழ்க.!
யாகங்கள் நடத்தி தியாகங்கள் செய்த!
புலி வீரரை மனதினில் நிறுத்து.!
ஈகங்கள் புரிந்த புலி வீரரின்!
நாமத்தை உந்தன் பிள்ளைக்கு சூட்டு.!
சிங்கள வெறியரின் ஊழிக் கூத்திற்கு!
மங்களம் பாடிய தலைவனைப் பாடு.!
மலர்ந்த நம் ஈழத்தில் கலைந்த எம்!
சொந்தங்கள் கூடியே குலவிடும்!
காட்சியை பெருமையாய் பாடு.!
விதியினை விரட்டிய வீரரை வாழ்த்திட!
வீதிக்கு வீதி விரைவதைப் பாரும்.!
மட்டில்லா மகிழ்வோடு வெற்றியின் முரசம்!
கொட்டுது கேளும். மாவிலை, தோரணம்,!
வாசலில் தொங்கிட, மங்கள வாத்திய!
வரவேற்பை, பார்க்கலாம் வாரும்.!
வல்லரசின் வல்லமைகள் விழி அகல!
வியந்து வருவதைக் காணலாம் வாரும்.!
தனி ஒருஅரசென அமைந்ததை பாரும்.!
இனி ஒரு துயர் எமக்கேது கூறும்?!
த.தயாநிதி!
பிரான்ஸ்!
23.03;.08
த.தயாநிதி

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.