ஆறு வயதிருக்கும்!
மாடி வீடு!
சிவப்பு நிற சிமெண்ட் தரை!
வழவழப்பாய்!
உத்தரத்தில்!
மின்விசிறி இல்லாத!
எங்கள் வீடு!
தேர்வுகள் மடிந்து போய்!
விடுமுறைக் காலமது!
சாப்பாட்டுக் கூடைக்கு!
விடுமுறைக் காலமது!
உத்தரத்தில் விசிறி போல்!
காற்றில் ஆடிக்கொண்டிருக்கும்!
கீச் கீச்சென்று!
பாட்டும் சிறகடிப்புமாய்!
கூட்டைக்கட்டியிருந்தன!
என் சிகப்புக் கூடையில்!
குருவிகள்!
விண்ணில் பறப்பதும்!
எங்களைப் பார்த்து வியப்பதும்!
குஞ்சுகளுக்கு இரை கொடுப்பதும்!
அழகாய் இருந்தது!
அந்த குடும்பம்!
நெல் மணிகள் இடுவதும்!
என் பிஸ்கட்டை சரி பாதி!
கொடுப்பதுமாய்!
சுகந்து போனது விடுமுறை!
குருவிக்கூட்டைக் கலைத்தால்!
குடும்பம் விளங்காது!
வேறு கூடை வாங்கிக் கொள்!
என்றாள் அம்மா..!
இன்று...!
நகரத்தில்!
என் வீட்டில்!
மின்விசிறி உள்ளது!
சங்கீதம் சீடி மூலம்!
ஒலிக்கிறது!
எங்கு தேடியும்!
குருவிகளை மட்டும் காணோம்!
விளங்குமா!
நம் குடும்பங்கள் ?!
நிசப்தம் என்னுள்!
திரவமாய் இறங்கி!
பயம் கொப்பளிக்கிறது

ரா.கணேஷ்