முட்கம்பிக்குள் மண்மூடிய கிராமம் - தீபச்செல்வன்

Photo by Tengyart on Unsplash

எல்லோருக்கும் பகிரமுடியாத!
ஒற்றைக் கிணற்றையும்!
முட்கம்பி சுற்றி எடுத்திருக்கிறது.!
தென்னோலைகள் தலைகீழாக தூங்க!
கண்களுக்கு எட்டிய இடமெல்லாம்!
வெடித்துச் சிதறிய!
குண்டுகளின் வெற்றுக் கோதுகள் கிடக்கிறது.!
வெயில் வந்து!
கூடாரங்களை மேய்ந்துகொண்டிருக்கிறது.!
முடி பறிக்கப்பட்ட தலைகளை!
சூரியன் தின்று கொண்டிருக்க!
முட்கம்பிகளில் தொங்கிக்கொண்டிருக்கிறது!
காலம் பற்றிய சொற்கள்.!
குண்டுகளற்ற பெட்டியை தட்டி விரித்து செய்யப்பட்ட!
இருக்கையில்!
நீயும் நானும் வைக்கப்பட்டிருக்கிறோம்.!
தரப்பட்ட நேரங்களை!
நாமறியாதபடி தின்றுகொண்டிருக்கிறது கடிகாரம்.!
எப்பொழுதும் வெடிக்க தயாராக!
ஒரு குண்டு!
இருக்கையின் கீழிருப்பதைப்போலிருக்கிறது.!
மீளவும் மீளவும்!
மனம் வெடித்து சிதறி எங்கும் கொட்டிக்கொண்டிருக்கிறது.!
எப்பொழுதும் இலங்கங்களை!
அறிவித்துக் கொண்டிருக்கும் ஒலிபெருக்கியில்!
யாரோ சொல்லத் துடிக்கிற!
சொற்கள்!
வாசலில் வந்து பொறுத்து நிற்கின்றன.!
எப்பொழுதும் ஒலிபெருக்கிகளுக்கு கொடுத்துவிட்ட!
காதுகளுக்கு!
யாரோ அழைப்பது போல கேட்கிறது.!
திசை பிரித்து கொண்டு செல்லப்பட்டவர்களாய்!
இன்னும் தேடிக்கிடைக்கப் பெறாதவர்களுக்காய்!
விசாரித்துக்கொண்டிருக்கிற!
தனித்துவிடப்பட்ட சிறுவன் எல்லோரையும் பார்க்கிறான்.!
மீள்வதற்கு எந்த வழிகளுமற்றுப்போக!
முட்கம்பி எங்கும் இழுத்துக் கட்டப்படுகிறது.!
துவக்குகள் வரிசையில் நின்று பார்த்துக்கொண்டிருக்க!
ஒடுங்கிய முகங்களில்!
பயங்கரத்துள் கைவிடப்பட்ட துயரம் ஒழுகுகிறது.!
யாரும் கண்களுக்கு எட்டடிவிடாத முடிவில்!
தலையை முட்கம்பியில்!
தொங்கப்போடுகிறான் அந்தச் சிறுவன்.!
யாரையும் சந்திக்காத வெறுமையில்!
வெயில் நிரம்பியிருக்கிறது.!
ஒலிபெருக்கி களைத்து அடங்கிவிட!
வெயில் இந்தத் தனிக்கிராமத்தை கடந்து சரிகிறது.!
இரவானதும்!
மனம் எப்பொழுதும் சிக்குப்பட்டுக்கிடக்கும்!
அந்தக் கிராமத்தை மண் மூடிக்கொண்டிருக்கிறது.!
05.07.2009
தீபச்செல்வன்

Comments

Authentication required

You must log in to post a comment.

Log in

There are no comments yet.